இந்த ராசியினர் கோபத்தை வெளிப்படுத்தினால் விளைவு மோசமாக இருக்கும்... ஏன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கால சக்கரத்தில் 12 ராசிகளிளுக்கும் தனித்துவமான சிறப்பம்சங்கள் காணப்படுகின்றது.
அதன் காரணமாக ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே கோபத்தை சிறப்பான முறையில் கையாளக்கூடியவர்களாக இருப்பார்கள்.
அப்படி எந்த சூழ்நிலைகளிலும் கோபத்தை வெளிப்படையாக காட்டாமல் ஞானிகளை போல் தங்களை தாங்களே கட்டுப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களுடன் எப்போதும் நல்லிணக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் அதிக கோபத்தை ஏற்படுத்தும் கடினமான சூழ்நிலையிலும்,தங்களின் கோபத்தை சிறப்பாக கையாளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்துவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து நன்றாக அறிந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் எல்லை மீறுவதால், மிகவும் மோசமான விளைவுகளை சச்திக்க வேண்டியிருக்கும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள் அது போல் இவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினால் விளைவு அபாயகரமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு அதிகம் கோபப்படுபவர்கள் போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் பல நேரங்களில் தங்களின் கோபத்தை சிறப்பாக கட்டுப்படுத்திக்கொள்ளும் குணம் இவர்களிடம் இருக்கும்.
இவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களையும் உள்ளுணர்வுகளையும் மற்றவர்களிடம் வெளிக்காட்டிக்கொள்ள ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.
கோபத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையிலும் மிகுந்த பொறுமையுடன் இருப்பார்கள்.ஆனால் அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினால் அந்த இடமே நரகமாகிவிடும். இவர்களின் கோபம் அவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
மீனம்
மீன ராசியை சேர்ந்தவர்கள் இயல்பாகவே மிகவும் மென்மையானவர்களாகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
பெரும்பாலான நேரத்தில் அமைதியாகவும், சாந்தமாகவும் இருக்கும் இவர்களின் கோபம் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.
பல வருடங்கள் அமைதியாக இருந்த எரிமலை வெடிக்கும் போது அவ்வளவு பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்துமோ, அது போல் இவர்களின் கோபம் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |