தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்காத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?
பொதுவாகவே மனிதர்களால் அனைவரையும் திருப்பதிப்பத்தும் வகையிலும் எல்லோருக்கும் நல்லவராகவும் வாழவே முடியாது.
மனிதர்களாக பிறந்தால் தவறு செய்வது இயல்பான விடயம் தான். ஆனால் செய்த தவறை நிச்சயம் உணரும் பக்குவம் இருக்க வேண்டும்.
தெரியாமல் தவறு செய்துவிட்டால் இந்த தவறால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டியது அவசியம். தவறு செய்யும் போது மன்னிப்பு கேட்பது மனித இயல்பு.
ஜோதிடம் சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் தவறு செய்தாலும் கூட மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.
அப்படி தங்கள் மேல் தவறு என்பது தெரிந்தும் மன்னிப்பு கேட்க மறுக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாகவும் எளிதில் கோபப்பட கூடியவர்களாகவும் இருப்பார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் அனைத்தையும் தகர்த்து வெற்றியடைய கூடியவர்கள். இவர்கள் தவறு செய்தால் எப்போதும் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்கவே மாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் தங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பார்கள். ஆனால் தவறு செய்தால் பிடித்தவர்களிடம் கூட மன்னிப்பு கேட்க தயங்குவார்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.இவர்கள் பாசம் வைத்துவிட்டால் உயிரையும் கொடுப்பார்கள்.யாரிடமும் தங்களின் சுய மரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இதனால் இவர்களுக்கு மன்னிப்பு கேட்பது மிகவும் சவாலான விடயமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |