ரிஷபத்தில் புதன் பெயர்ச்சி : இந்த ராசிகளுக்கு கத்திமேல் நடக்கும் ஆபத்தான காலகட்டம் ஜாக்கிரதை!
ஜோதிட ரீதியில் கிரங்களின் பெயர்ச்சி மற்றும் ஆற்றல் மிக்க கிரகங்கள் இணைவதால் ஏற்படும் அரிய யோகங்கள் என்பவற்றின் தாக்கமானது ராசி பலன் கணிப்பில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
அந்தவகையில், நவகிரகங்களின் இளவரசனாகவும், படிப்பு புத்தி கூர்மை, அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி தாராராகவும் அறியப்படும் புதன் பகவான் மேஷ ராசியில் பயணித்து வந்த நிலையில், தற்போது சுக்கிரனின் ரசியான ரிஷபத்துக்கு பெயர்ச்சியடைந்துள்ளார்.

புதனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.
குறிப்பிட்ட சில ராசியினர் இந்த கிரக மாற்றத்தால் நேர்மறையான பலன்களை அடைந்தாலும் சில ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி பெரிய நிதி இழப்புக்களையும், துன்பத்தையும் கொடுக்கப்போகின்றது.
அப்படி தனிப்பட்ட வாழ்க்கை, மற்றும் தொழில் வாழ்க்கையில் தடைகளையும் பிரச்சினைகளையும் சந்திக்கப்போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றமானது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில் வாழ்க்கையிலும் சரி பாரிய சிக்கல்களையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தப்போகின்றது.
இந்த காலகட்டத்தில், இவர்களின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். சிறிய வாக்குவாதங்கள் கூட பெரிய மோதலாக மாற வாய்ப்புள்ளது.
திடீர் திருட்டு, நிதி இழப்பு அல்லது நெருப்பு தொடர்பான விபத்துகளில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதால் எந்த வேலையை செய்யும் போதும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த ராசி மாற்றம் எதிர்பாராத சவால்களையும் சம்பந்தமில்லாத பிரச்சினைகளையும் ஏற்படுத்த அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில், குறிப்பாக ஒவ்வாமை அல்லது தோல் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்பு காணப்படுவதால், புதிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குறித்த கிரக பெயர்ச்சியால் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உறவுகளுடனும், வாழ்க்கை துணையுடனும் கருத்து வேறுப்பாடால் பிரிவை சந்திக்க நேரிடலாம்.
கும்பம்

இந்த கிரக பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு பல்வேறு விடயங்களிலும் கலவையான பலன்களையே கொடுக்கப்போகின்றது.
குறிப்பாக மாணவர்களுக்கு இந்த காலம் கொஞ்சம் கடினமாக இருக்கலாம். அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிக்கலை அனுபவிக்கலாம்.
அவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும், வேறு இடத்திற்கும் பயணம் செய்வதது குறித்து சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். பயணங்களால் சிக்கலில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |