குடும்பத்துக்காகவே உயிர் வாழும் ராசியினர்.. இவர்களை மட்டும் மிஸ் பண்ணீறாதீங்க
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் குடும்பம் மிக முக்கியமானது.
குடும்பம் சரியாக இருந்தால் தான் அந்த குடும்பத்தில் பிறந்து வளரும் குழந்தை நல்லபடியாக வளர்ந்து இந்த உலகில் பிரகாசிப்பார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் தன்னுடைய குடும்பத்திற்காகவே உயிர் வாழும் ஒரு பிள்ளை இருக்கும்.
இவர்கள் தான் குடும்பத்தில் என்ன நடந்தாலும் குடும்பம் பிரியாமல் பார்த்துக் கொள்வார்கள். மற்றவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு வாழும் இவர்கள் நேர்மறையான ஆற்றல்களை அதிகமாக கொண்டிருப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த குணம் இயற்கையாகவே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களின் மகிழ்ச்சிக்காகவும், நிம்மதிக்காகவும் ஓடிக் கொண்டிருப்பவர்கள் பிறந்த ராசிகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
தனுசு | குருபகவானால் ஆளப்படும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வார்கள். நேர்மறையான ஆற்றல்களை வளர்க்கும் குணம் இவர்களிடம் இருக்கும். எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்கள் போல் அல்லாமல் வீட்டிலுள்ளவர்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் யார் சோகமாக இருந்தாலும் அவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதை ஆராயும் குணம் இவர்களிடம் இருக்கும். நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். சுதந்திரமாக தங்களின் கருத்துக்களை பகிர்வார்கள். |
துலாம் | சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசியில் பிறந்தவர்கள் நல்லிணக்கம் மற்றும் அன்பை கொண்டவர்களாக இருப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடையே உள்ள மோதல்களை எளிதில் தீர்ப்பார்கள். அமைதியான குணம் கொண்ட இவர்களை மற்றவர்களை அதிகம் கவர்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலும் அவர்களிடம் ஆலோசனை கேட்டு தான் அடுத்தக்கட்டத்திற்கு நகர்வார்கள். அனைவரையும் மதிக்கும் இவர்கள் நேர்மறையான ஆற்றல்களை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பார்கள். சிரிப்பு, நியாயம் மற்றும் உறவுகளை ஆதரிப்பவர்களாக இருப்பார்கள். சூரிய ஒளியாக இருக்கும் இவர்களை மற்றவர்களுக்கும் அதிகமாக பிடிக்கும். |
மிதுனம் | கிரகங்களின் இளவரசரான புதன் கிரகத்தால் ஆளப்படும் இந்த ராசியினர் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கதைகள், நகைச்சுவைகள் மற்றும் புதிய யோசனைகளால் குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள். தனித்தனியாக சிக்கல்களை தீர்த்து தகுந்த முடிவு கூறுவார்கள். மிதுன ராசிக்காரர்கள் விளையாட்டுத்தனமானவர்களாக இருப்பார்கள். புத்திசாலித்தனம் மற்றும் வசீகர சிரிப்பு மற்றவர்களை அதிகமாக கவரும். பதற்றத்தைக் குறைக்க மற்றவர்களுடன் நட்பாக பழகுவார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
