இந்த ராசியினர் ஆயிரத்தில் ஒருவராம்.. உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்த்திரங்களின் படி, ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனிப்பட்ட திறமைகள் இருக்கும்.
அந்த திறமை இனங்கண்டு அதற்காக உழைப்பவர்கள் மாத்திரமே இந்த உலகில் சாதிக்கிறார்கள். சாதனைச் செய்ய உழைப்புடன் சேர்த்து அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும் என முன்னோர்கள் கூறுகிறார்கள்.
அப்படியாயின், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இருக்கும் வேலையின் அழுத்தம் எந்தவிதத்திலும் அவர்களை தாக்காது.
நம்மை சுற்றி பலர் இருந்தாலும் அவர்கள் அவர்களுடைய வேலையை சரியாக செய்துக் கொண்டிருப்பார்கள். இவர்களே அவர்களின் துறையில் சாதிப்பார்கள்.
அந்த வகையில், ஜோதிட சாஸ்த்திரங்களில் கூறப்பட்டதை போன்று படைப்பாற்றல், புத்திசாலித்தனம், தலைமைத்துவம், பேச்சாற்றல் என அனைத்து துறைகளிலும் சாதிக்கும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
பல் திறமைசாலிகளாக இருக்கும் ராசியினர்
மிதுனம் | மிதுன ராசியில் பிறந்தவர்கள் மற்ற ராசிகளை விட புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்களை பார்த்து மற்றவர்கள் பொறாமைக் கொள்வார்கள். ஏனெனின் இவர்களின் முயற்சி எல்லா துறைகளிலும் இருக்கும். எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். இவர்களாக முடியாதது என்று யாரும் இருக்கமாட்டார்கள். வித்தியாசமான மற்றும் புதிய வேலைகளை செய்ய விரும்பும் இவர்கள் திறமைசாலிகளாகவே பார்க்கப்படுகிறார்கள். அதுவே அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும். |
கன்னி | கன்னி ராசியில் பிறந்தவர்கள் பிறவியில் புத்திசாலிகளாக இருப்பார்கள். எப்போதும் தொலைநோக்கு பார்வைகள் கொண்ட இவர்கள் வருங்காலத்தில் வரும் பிரச்சினைகளை முன்கூட்டியே கணிப்பார்கள். அதிகாரங்கள் இருப்பின் அதற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். அமைதியாக இருந்து தன்னுடைய உழைப்பை போட்டுக் கொண்டிருப்பார்கள். பதற்றம் இல்லாமல் எல்லா விடயங்களையும் அமைதியாக இருந்து செய்யும் ராசியினராக பார்க்கப்படுகிறார்கள். |
துலாம் | துலாம் ராசியில் பிறந்தவர்கள் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை விரும்பும் நபர்களாக இருப்பார்கள். நேர்மையான பணிகளை செய்வார்கள். சிறந்த தகவல் தொடர்பாடல் திறமை இவர்களிடம் இருக்கும். அசாத்திய புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருக்கும் இவர்கள் பல வேலைகளை செய்தாலும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். அனைவருடனும் அன்புடன் பழகுவார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
