மற்றவர்களால் ஒதுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... ஏன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கை மற்றும் தனித்துவமான பண்புகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினரை மற்றவர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒதுக்கி வைத்து விடுகின்றார்கள். இவர்களை யாருக்கும் பெரிதாக பிடிப்பதில்லை.
அப்படி மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிகாரர்கள் அவைவருக்கும் பிடிக்காத ராசிகளின் பட்டியலிலும் முதலில் தான் இருக்கின்றனர். இவர்களிடம், பிறருடன் போட்டி போட வேண்டும் என்ற எண்ணமும், என்ன செய்தாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்பது போன்ற எண்ணங்களும் உயர் மட்டத்தில் காணப்படுகின்றது.
இத்தகைய வலிமையான குணமும் கடுமையான போக்கையும் பெரும்பாலானோர் விரும்புவதில்லை.
விருச்சிகம்
விருச்சிக ராசியை சேர்ந்தவர்களை அனேகமானோர் பிழையாக புரிந்துக்கொள்ளும் நிலை ஏற்படும். இவர்கள், தங்களது உணர்வுகள் மற்றும் தாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை எப்போதும் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வர்.
இதனால், பல சமயங்களில் இவர்களுடன் இருப்பவர்களாலேயே இவர்களை புரிந்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
இவர்கள் அனைவரிடமும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள் மற்றவர்கள் கூறும் ரகசியங்களை வேறு யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள் இதனால் பல நேரங்களில் ஓரங்கட்டப்படுகின்றனர்.
மகரம்
மகர ராசியை சேர்ந்தவர்கள், அவர்களின் லட்சியத்திலேயே எப்போதும் கண்ணாக இருப்பார்கள் சிலர் இந்த குணாதிசயத்தை சுயநலம் என தவறாக புரிந்துக்கொள்வார்கள்.
அதனால் பலரின் வெறுப்புக்கும் ஆளாவார்கள். மகர ராசிக்காரர்களுக்கு மாறாத உறுதியும், பெரிதாக எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் எப்போதும் முன்னிலையில் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் இவர்கள் மற்றவர்களால் வெறுக்கப்படுகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |