கருப்பு நிறத்தில் பால்! எந்த விலங்கின் பால் இந்த நிறத்தில் இருக்கும்னு தெரியுமா?
பொதுவாகவே பால் என்பது மனிதர்களை பொருத்தவரையில் அத்தியாவசிய தேவையாகவே கருதப்படுகின்றது.
மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான, ஆரோக்கியமான ஒரு பானம் என்ற கருத்து பெரும்பாலானவர்கள் மத்தியில் பரவலாக உள்ளது.
இரவில் ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டு தூங்குவதை பலர் ஒரு தினசரி பழக்கமாக கடைபிடிக்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட குழந்தைப் பருவத்தைக் கடந்த பிறகு, மனிதனைத் தவிர வேறு எந்த மிருகமும் வாழ்நாள் முழுவதும் பால் குடிப்பதில்லை, குறிப்பாக வேறு மிருகத்தின் பாலை.
ஆனால் மனிதர்கள் குழந்தையாக இருக்கும்போது தாய் பால் கொடுக்கப்படுகிறது. அவர்கள் வளர்ந்ததன் பின்னர் ஆடு அல்லது மாட்டு பால் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மனிதர்கள் மட்டுமன்றி ஆடு, மாடு, ஒட்டகம், சிங்கம், புலி என உலகில் சுமார் 6,400 பாலூட்டிகள் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அனைவருக்குமே பால் என்றதும் நினைவிற்கு வருவது அதன் நிறம் தான்.
கருப்பு நிறத்தில் பால் இருக்கா?
பால் என்றால் வெள்ளையாகத்தான் இருக்கும் என்ற கருத்து அனைவர் மத்தியிலம் நிலவுகின்றது. ஆனால் உலகில் ஒரு விலங்கின் பால் மட்டும் கருப்பு நிறத்தில் தான் இருக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?ஆம்
காண்டாமிருகத்தின் பால் கருப்பு நிறத்தில் தான் இருக்கும். இவை ஆபிரிக்க கருப்பு காண்டாமிருகம் என அறியப்படுகின்றது.
மேலும் ஆபிரிக்க காண்டாமிருகங்களின் பாலில் 0.2 சதவீதம் மாத்திரமே கொழுப்பு காணப்படுகின்றது.இதன் பால் தண்ணீர் போல் கருப்பு நிறத்தில் இருக்கும்.
அதுமட்டுமன்றி இவ்வகை கருப்பு காண்டாமிருகங்களால் 4 முதல் 5 வயது வரை மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடிவதுடன் அவை ஒரு வருடத்திற்கும் மேலாக கர்பகாலத்தை அனுபவிக்கின்றது.
ஆபிரிக்க காண்டாமிருகங்கள் ஒரு தடவையில் ஒரு குட்டியை மாத்திரமே ஈனும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |