நினைத்ததை சாதிக்கும் வரை பிடிவாதத்தை விடாத பெண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே அதிக பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்கள் நினைத்ததை சாதிக்கும் வரையில் ஓயவே மாட்டார்களாம்.
அப்படி பிறப்பிலேயே பிடிவாதத்துக்கு பெயர் பெற்ற பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
அன்பு, அழகு மற்றும் இன்பத்தின் கிரகத்தால் ஆளப்படும் பூமி ராசியான, ரிஷபம் வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்ற தீராத ஆசை கொண்டவர்களாக இருப்பார்களாம்.
இந்த ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே சிறந்த அறிவுடையவர்களாகவும், நிதி முகாமைத்துவ ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் ஒரு முடிவு செய்துவிட்டால் இறுதிவரையில் அதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்களின் பிடிவாத குணம் பெரும்பாலும் இவர்களிகன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும். நினைத்ததை அடையும் வரையில் இவர்களின் எண்ணம் முழுவதும் இவர்களின் இலக்கில் தான் இருக்கும்.
சிம்மம்
அனைத்து கிரகங்களையும் ஆளும் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசி பெண்கள் இயல்பாகவே தலைமைத்துவ குணங்களுக்கும் பிடிவாதத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி பெண்களிடம் அசாத்தியமான தன்னம்பிக்கையும் தைரியமும் நிச்சயம் இருக்கும். இவர்களின் இந்த குணங்கள் தான் இவர்களின் தீராத பிடிவாத குணத்துக்கும் அடிப்படை காரணமாக இருக்கும்.
இவர்கள் ஒரு விடயம் வேண்டும் என முடிவு செய்துவிட்டால், யார் சொல்லுக்கும் கட்டுப்படவே மாட்டார்கள். இவர்கள் சரியாக முடிவு எடுக்காவிட்டாலும்? எடுத்த முடிவை சரியாக்கும் அளவுக்கு கில்லாடிகளாக இருப்பார்கள்.
விருச்சிகம்
மர்மமான குணத்துக்கும், ரகசிய இயல்புக்கும் பெயர் பெற்ற விருச்சிக ராசி பெண்கள் எதையும் வெளிப்படையாக பேசாத போதும் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் நெருக்கி பழகும் நபர்களிடம் கூட தங்களின் தனிப்பட்ட ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள விரும்பவே மாட்டார்கள். ஆனால் இவர்களின் பிடிவாதம் தங்களின் இலக்கை அடையும் வரையில் ஓயாது.
இவர்கள் எந்த விடயத்தை முடிவு செய்தாலும் இறுதிவரையில் தங்களின் முடிவை மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள். இவர்களின் அதீத தன்னம்பிக்கையால் இவர்களின் பிடிவாத குணத்தை இவர்களால் வாழ்க்கை முழுவதும் விடவே முடியாது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |