தங்களை தாங்களே ராணியாக்கிக்கொள்ளும் பெண் ராசிகள்... உங்க ராசியும் இதுவா?
பொதுவாக ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், கல்வி, தொழில் திருமண வாழ்க்கை, காதல், விசேட திறமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்த்திரம் குறிப்பிடுகின்றது.
அதன் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே மற்றவர்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் ஆளுமையும் சிறந்த பேச்சாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படி தங்களின் தலையீட்டால் எதையும் சாதிக்கும் துணிவு கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசி பெண்கள் அவர்களின் கவர்ச்சிகரமான இருப்புக்கு பெயர் பெற்றவர்களாகவும், மர்மமான குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் கவலைகள் பற்றி யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள விரும்பவே மாட்டார்கள். ஆனால் இவர்கள் சொல்லுவதை மற்றவர்கள் கேட்டு நடக்கும் படி ஆனையிடும் ஆற்றல் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் தங்களை எப்போதும் உயர்ந்த இடத்தில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணம் இவர்ளை ஒரு தலைவியாக மாற்றும்.
சிம்மம்

அனைத்து ராசிகளையும் ஆளும் கிரகமான சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசி பெண்கள் இயல்பிலேயே தலைமைத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கடளிம் மற்றவர்களை நெடியில் வசீகரிக்கும் ஒரு காந்த ஆற்றலும், யாரையும் அடக்கியாளும் சிறந்த பேச்சுத்திறமையும் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் கூட்டத்தில் இருந்தாவும் அனைவராலும் ஈர்க்கப்படும் தனித்துவமான அழகு மற்றும் நேர்த்தியை கொண்டிருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராணியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
மேஷம்

போர் கிரகமான செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த மேஷ ராசி பெண்கள் இயல்பாகவே தங்களின் கருத்துக்களை நிலைநிறுத்துவதற்கு எந்த எல்லைக்கும் செல்லும் ஆற்றல் மிக்க ராசியாக அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் சரியான முடிவை எடுப்பதற்கு பதிலாக எடுத்த முடிவை சரியாக்கியே தீர வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாகவும் யாரையும் எளிதில் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்க ஆளுமை கொண்டவர்களாகவும் இருக்கும்.
இவர்களின் இந்த குணங்கள் இவர்களை நிச்சயம் அதிகாரம் மிக்க இடத்துக்கு கொண்டு செல்லும். இந்த ராசி பெண்கள் சொந்த முயற்சியில் தலைமை பதவியில் அமர்வார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |