இந்த ராசியினர் தங்களின் உண்மை குணத்தை வெளிப்படுத்த மாட்டார்களாம்... யார் யார் தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சதத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தங்களின் உண்மையான குணத்தை மறைத்து தங்களை நல்லவர்களாகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்களாம்.
அப்படி தங்களின் சுயத்தை மறைத்து எப்போதும் போலியான முகத்தை உலகத்துக்கு காட்டும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களை வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர வைக்க வேண்டும் என்பதில் மிகவும் உருதியாக இருப்பார்கள்.
இவர்கள் இடத்துக்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக்கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். எந்த இடத்தில் என்ன பேச வேண்டுமென்பதில் தெளிவாக இருப்பார்கள்.
அவர்களின் இந்த குணம் மற்றவர்களால் அவர்களை எப்போதும் நல்லவர்களாக உணர வைக்கிறது. இவர்கள் தங்களின் உள்ளுணர்வுகளை எப்போதும் வெளிப்படுத்த மாட்டார்கள்.
மிதுனம்
மிதுன ராசியினர் இயல்பாகவே சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இரட்டை ஆளுமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வசீகரமான தோற்றமும் காந்த போல் மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் ஆற்றலையும் கொண்டிருப்பார்கள்.
தங்களின் உணர்வுகளை ஒருபோதும் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். இவர்களின் உண்மையான குணம் என்ன என்பதை யாராலும் எளிமையாக கண்டுப்பிடிக்கவே முடியாது.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் மனவலிமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் எப்போதும் தங்களை தீவிரமானவர்களாகவும் முதிர்ச்சியுள்ளவர்களாகவும் தங்களை காட்டிக்டிகொள்ள விரும்புவதுடன் இவர்கள் எப்போதும் தங்களை நல்லவர்கள் என்ற போர்வையிலேயே வைத்துக்கொள்ள நினைப்பார்கள்.
மற்றவர்களை நம்ப வைக்க நல்லவர்கள் என்ற முகமூடியை அணிந்து கொள்கிறார்கள். இவர்களின் உண்மை குணத்தை நீண்ட நாட்கள் பழகிய பின்னரும் கூட முழுமையாக அறிய முடியாது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |