சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
பொதுவாகவே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ஒரு வயதுக்கு மேல் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற ஈடுபாடு இயற்கையபாகவே வந்துவிடும்.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என ஆசைபடும் இயல்புடையவர்களாக இருப்பார்களாம்.
அப்படி மற்ற பெண்களுடன் ஒப்பிடும் போது விரைவில் திருமண வாழ்க்கைக்குள் செல்ல விரும்பும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
சந்திரனால் ஆளப்படும் கடக ராசி பெண்கள், காதல் மற்றும் திருமணத்தின் மீது இயல்பாகவே அதிக ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
வீடு, குடும்பம் என உணர்வு ரீதியில் பாதுகாப்பை விரும்பவதன் காரணமாக விரைவில் திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்ற ஆர்வம் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
அவர்கள் இயற்கையாகவே அக்கறை உணர்வு கொண்டவர்களாகவும் சிறு வயதிலிருந்தே அன்புக்காக ஏங்குபவர்களாகவும் இருப்பார்கள். உறவுகள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ரிஷபம்
அழகு மற்றும் காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி பெண்கள் காதல் மற்றும் திருமணத்தின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் காதல் விடயத்தில் மிகுந்த உண்மையும் நேர்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இயல்பாகவே அன்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ஒரு வாழ்ககை துணையை தெரிவு செய்த பின்னர் கொஞ்சமும் தாமதிக்காது திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
காரணம் இவர்கள் காதல் உண்மையாக இருக்கும் இவர்கள் வாழ்வில் இறுதி வரையில் ஒரே நபரை காதல் செய்ய வேண்டும் என நினைப்பார்கள். எனவே சீக்கிரம் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இந்த ராசி பெண்களுக்கு அதிகம்.
துலாம்
துலாம் ராசி பெண்களும் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனால் அளப்படுபவர்கள் என்பதால் உறவுகள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள யாராவது இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவர்களின் சுக துக்கங்களை யாரிடமாவது பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு அதிகம் இருக்கும்.
இவர்களுக்கு இயற்கையாகவே காதல் உணர்வு அதிகம் இருக்கும். இவர்களின் இந்த முக்கிய குணங்களால் இந்த ராசி பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.
இவர்கள் தங்களுக்கு பிடித்த நபருடன் இணைந்து ஒரு அழகான மற்றும் சமநிலையான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |