செரிமான அமைப்பை சீராக்கும் கொத்தமல்லி காரகுழம்பு!

Weight Loss Constipation Healthy Food Recipes Coriander Leaves Stomach Ulcer
By Vinoja Mar 15, 2026 04:30 AM GMT
Report

பொதுவாகவே தென்னிந்திய சமையல்களில் கொத்தமல்லிக்கு முக்கிய இடம் காணப்படுகின்றது. அதன் சுவை மற்றும் நறுமணம் காரணமாக பிரியாணியில் ஆரம்பித்து ரசம் வரையில் அனைத்திலும் கொத்தமல்லி தனக்கான இடத்தை நிச்சயம் பிடித்துவிடுகின்றது.

அது சுவை, மணத்துக்கு மாத்திரமன்றி ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்களுக்கு பெரிதும் அறியப்படுகின்றது.

செரிமான அமைப்பை சீராக்கும் கொத்தமல்லி காரகுழம்பு! | Kothamalli Kara Kulambu Recipe And Heath Benefits

கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, சி என பல வைட்டமின்களும் உள்ளன. கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், என்பனவும் செறிந்து காணப்படுகின்றது.

இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவாக அதிகரிப்பதுடன், அதில் காணப்படும் நார்ச்சத்து, செரிமான அமைப்பை சீராக்குவதுடன் மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கும்.

செரிமான அமைப்பை சீராக்கும் கொத்தமல்லி காரகுழம்பு! | Kothamalli Kara Kulambu Recipe And Heath Benefits

நீங்க வாங்கும் எலுமிச்சை பழத்தின் உள்ளே சாறே இல்லையா? இனி இப்படி பார்த்து வாங்குங்க!

நீங்க வாங்கும் எலுமிச்சை பழத்தின் உள்ளே சாறே இல்லையா? இனி இப்படி பார்த்து வாங்குங்க!

குறிப்பான உடல் எடையை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்று போராடுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள கொத்தமல்லியில் வழக்கம் போல் சட்னி செய்யாமல் ஒரு தடவை இந்த முறையில் அசத்தலாக காரகுழம்பு செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

 கொத்தமல்லி இலை -1 கப்

புளி - சிறிதளவு

சாம்பார் பொடி -1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் -¼ தே.கரண்டி 

மிளகாய் தூள்  - 1 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் -10

பூண்டு பல்  -10

 வெல்லம் - ¼ தே.கரண்டி 

 உப்பு - தேவையான அளவு

செரிமான அமைப்பை சீராக்கும் கொத்தமல்லி காரகுழம்பு! | Kothamalli Kara Kulambu Recipe And Heath Benefits

தாளிக்க தேவையானவை 

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 

 கடுகு - ½ தே.கரண்டி 

 வெந்தயம் - ¼ தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி

துவரம் பருப்பு - 1 தே.கரண்டி

 சீரகம் - 1 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

முதலில் புளியை 20 நிமிடங்கள் சூடான  தண்ணீரில்  ஊற விட்டு, அதை கரைத்து வடிக்கட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

செரிமான அமைப்பை சீராக்கும் கொத்தமல்லி காரகுழம்பு! | Kothamalli Kara Kulambu Recipe And Heath Benefits

பின்னர் நறுக்கிய கொத்தமல்லியை ஒரு மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் சேர்த்து சூடாக்கி,  கடுகு சேர்த்து தாளித்து கடுகு பொரிந்ததும் வெந்தயம், உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை  சேர்த்து தாளிக்க வேண்டும்.

செரிமான அமைப்பை சீராக்கும் கொத்தமல்லி காரகுழம்பு! | Kothamalli Kara Kulambu Recipe And Heath Benefits

வெயிலால் ஏற்பட்ட கருமையை வெறும் 15 நிமிடங்களில் போக்கணுமா? டாப் 3 ஃபேஸ் பேக்!

வெயிலால் ஏற்பட்ட கருமையை வெறும் 15 நிமிடங்களில் போக்கணுமா? டாப் 3 ஃபேஸ் பேக்!

அதன் பின்பு  நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு  ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வதக்கி, பூண்டு வாசனை வந்ததும், புளி சாறு, சாம்பார் பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் அரைத்த கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். 

பின்னர் அதனுடன்  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு குழம்பு நன்றாக கொதித்து கெட்டியாகும் போது வெல்லத்தைச் சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் திக்கான கொத்தமல்லி குழம்பு தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US