எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
பொதுவாகவே மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவ குணம் இருக்கும். அப்படி ஒருவர் எப்படிப்பட்ட ஆளுமை என்பதை நிர்ணயம் செய்வதில் அவருடைய ராசியானது பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் வித்தியாசமான குணங்களை கொண்டவர்களாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதில் வல்லவர்களாகவும், எதிலும் முழுமையை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.
அப்படி அனைத்து விடயங்களிலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை விட அதிகளவில் பொது அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எல்லா விடயத்தையும் சரியாகவும் சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியிரால் தீர்கக முடியாத பிரச்சினைகளே கிடையாது என்பது போல் சிறந்த தீர்வாளர்களாவும் இருப்பார்கள்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் லட்சிய வாதிகளாகவும் திட்டமிடுவதில் கில்லாடிகளாகவும் இருப்பார்கள். எதையும் திருத்தமாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்களின் ராசி அதிபதியாக சனிபகவான் இருப்பதால், வாழ்வில் நீதி, நேர்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இவர்கள் தீர்க்கவே முடியாத சிக்கல்களையும் தங்களின் நிதானமான குணத்தினால் எளிமையாக தீர்த்துவிடுவார்கள். இவர்களுக்கு நுண்ணறிவு அதிகமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்களின் கருத்துக்கு மற்றவர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் புதுமையான மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைகளை பின்பற்றும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எவ்வளவு சவால் மிக்க சூழ்நிலையையும் தங்களின் தொலை நோக்கு பார்வையால் சரியான முறையில் கடந்து விடுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |