மார்ச் மாதம் தொழிலில் அசுர வளர்ச்சியடைய போகும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் கிரக நிலவரங்களின்படி மார்ச் மாதத்துக்கான ராசிபலன் கணிப்பின் அடிப்படையில் தொழில் ரீதியில் பாரியளவில் வளர்ச்சியடைய போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு மார்ச் மாதம் சிறப்பான மாதமாக அமையும். எதிர்ப்பாராத நிதி முன்னேற்றங்களை அடையும் வாய்ப்பு காணப்படுகின்றது.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கடன் பிரச்சினைகள் நீங்கும். அரச வேலையில் ஈடுப்படுபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.
இந்த ராசியினருக்கு பல்வேறு வழிகளில் இருந்தும் வருமானம் கிடைக்கும். நிதி ரீதியில் செழிப்பான மாதமாக மார்ச் மாதம் இருக்கும்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு மார்ச் மாதத்தில் புதிதாக தொழில் தொடங்கும் யோகம் அமையும். பணவரவு இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.
ஆரம்பத்தில் தெழில் முயற்ச்சிகள் மன அழுத்தத்தை கொடுப்பதாக இருந்தாலும், பின்னர் சிறப்பான நிதி ஆதாயங்களை கொடுக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு மனதுக்கு பிடித்த வேலை எதிர்ப்பார்த்த சம்பளத்தில் அமையும்.அதிகாரிகளுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு மார்ச் மாதம் தொழில் ரீதியாக அதிர்ஷ்டகரமான பலன்களை கொடுக்கக்கூடிய ஒரு நல்ல மாதமாக இருக்கும்.
இம்மாதம் தொழில் விடயங்களில் எடுக்கும் முயற்சிகளில் உடனடி வெற்றி கிடைக்காவிட்டாலும், பின்னர் அசுர வளர்ச்சியை கொடுக்கும்.
இம்மாதத்தில் நேர்மறை எண்ணங்களை கொண்டிருப்பதனால் அனுகூலமான பலன்கள் அதிகரிக்கும். இம்மாதம் நிதி நிலை செலிப்பாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
