இந்த ராசியினரிடம் தவறியும் ரகசியம் சொல்லவே கூடாதாம்... ஏன்னு தெரியுமா?
ஒருவருடைய எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களை அவர்களின் பிறப்பு ராசியே தீர்மாணிப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே ரகசியம் காக்கும் திறன் அற்றவர்களாக இருப்பார்களாம்.
இவர்களால் எந்த விடயத்தையும் மனதுக்குள் வைத்துக்கொள்ளவே முடியாது. அப்படி ரகசியத்தை காப்பாற்ற தெரியாத ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் அனைவரிடமும் தயக்கம் இன்றி பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அந்த குணத்தால் இவர்கள் எந்த விடயத்தையும் ரகசியமாக வைத்துக் கொள்ள முடியாமல் போகும். இவர்களுக்கு ஒரு ரகசியம் தெரியவந்தால் அதை மற்றவர்களிடம் சொன்னால் மட்டுமே இவர்களின் மனம் ஆறுதலடையும்.
இந்த ராசியினரிடம் முக்கியமான விடயங்களை பகிர்ந்து மிகவும் ஆபத்தானது. இவர்கள் நிச்சயம் அதனை வெளிப்படுத்திவிடுவார்கள்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் மிகச்சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.இவர்கள் கடினமான சூழ்நிலைகளிலும் மிகவும் ஆறுதலாக இருப்பார்கள்.
ஆனால் இவர்கள் மனதில் எந்த விடயத்தையும் மறைத்து வைக்கும் குணம் அற்றவர்களாக இருப்பதனால் இவரை்களிடம் சொல்லப்படும் ரகசியம் காட்டு தீயாய் பரவிவிடும்.
இவர்கள் வேண்டும் என்றே ரசிகரியங்களை வெளிப்படுத்துவது கிடையாது. இவர்களுக்கு இயல்பாகவே அனைத்து விடயங்களையும் பேசும் அனைவரிடடும் பகிர்ந்துக்கொள்ளும் பழக்கம் இருக்கும்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் சாகச இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.இவர்கள் ஒரு பறவை போல் சுற்றித்திரிய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
இந்த ராசியினர் பார்க்கும் அனைவரிடமும் திறந்த மனதுடன் பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்கள் தங்களிடம் நம்பி சொல்லும் ரகசியங்களை வெளிப்படுத்தினால், அவர்களின் மனம் புண்படும் என்பது குறித்து துளியும் நினைக்க மாட்டார்கள்.இவர்களின் கட்டுபாடற்ற பேச்சால் இவர்கள் ரகசியம் காப்பது மிகவும் சாவாலானது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
