எதிர்மறை ஆற்றல்களை எளிதில் ஈர்க்கும் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்ககையுடன் மட்டுமன்றி, அவர்களின் தோற்றம், நிதி நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுடனும் நேரடியான தாக்கத்தை கொண்டிருக்கும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே தீய சக்திகளால் அதிகம் ஈர்க்கப்படுவார்களாம். எதிர்மறை ஆற்றல்கள் குறித்து இவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அப்படி பிறப்பிலேயே எதிர்மறை ஆற்றல்களை எளிதில் வசீகரிக்க்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பிறப்பிலேயே ரகசிய இயல்புக்கும் மர்மமான அணுகுமுறைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
பெரும்பாலான மக்கள் விருச்சிக ராசிக்காரர்களை தீவிரம் மற்றும் ஆர்வத்துடன் தொடர்புபடுத்துகிறார்கள், அதனால் இந்த ராசியினர் தீய சக்திகளாலும் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இவர்களின் வெளிப்பமையற்ற தன்மை, மற்றும் அதிகமான தனிமையில் இருக்கும் குணம் போன்றன இவர்கள் எதிர்மறை ஆற்றல்களால் அதிகம் ஈக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், எதையும் முக மதிப்பில் எடுத்துக்கொள்ள மறுப்பவர்களாகவும் இருப்பார்கள். இது தீய சக்திகளை வசீகரிக்கும்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் தங்களின் குடும்பம் மற்றும் உறவினர்களின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும், அவர்களின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் இந்த அதிகமாக உணர்ச்சிவசப்படும் தன்மை எதிர்மறை ஆற்றல்களால் இவர்கள் பாதிக்கப்பட காரணமாக இருக்கும். மேலும் இவர்கள் மனதளவில் அமானுஷ்யங்கள் குறித்த பயம் மற்றும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவை நம்மில் பெரும்பாலோருக்கு கேட்க முடியாத ஒரு உணர்ச்சி அதிர்வெண்ணுடன் இந்த ராசியினர் இணைந்திருப்பார்கள். மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாத எதிர்மறை ஆற்றல்களை இவர்களால் எளிதில் உணர முடியும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இயல்பாகவே கற்பனை ஆற்றல் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ ஆசைப்படும் வாழ்வை பெரும்பாலும் கனவு உலகிலேயே வாழ்ந்துவிடுவார்கள்.
அவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த கற்பனை உலகங்களில் வாழ்கிறார்கள், ஆனால் அதற்காக அவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாதவர்கள் என்று அர்த்தமல்ல
மாறாக, பல மீன ராசிக்காரர்கள் மற்றவர்கள் தவறவிடும் அதிர்வுகளை உணரும் ஒரு அசாத்திய திறமையைக் கொண்டுள்ளனர். அதனால் இவர்கள் எதிர்மறை ஆற்றல்களால் அதிகம் ஈர்க்படுகின்றார்கள். தீய சக்திகள் தொடர்பாக இந்த ராசியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |