365 நாட்களுக்கு பின் நிகழும் குரு- சூரியன் சேர்க்கை: பணமழையில் நனைய போகும் 3 ராசிகள்!
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில் அனைத்து கிரகங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூரியன் மற்றும் குருவின் சிறப்பான சேர்க்கை நடக்க இருப்பதால் 12 ராசிகளுக்கும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
இருப்பினும், சில ராசிகள் பெரும் அதிர்ஷ்டத்தையும் செல்வ செழிப்பையும் பெறப்போகின்றார்கள். அப்படி இந்த சேர்க்கையால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்

சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையானது மகர ராசியினரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான பலன்களை ஏற்படுத்தப்போகின்றது.
இந்த ராசியினரின் தொழில் வாழ்க்கையிலும் ஒரு பெரிய தருணம் வரும். சொத்து மற்றும் வாகனம் வாங்கும் யோகம் காணப்படுகின்றது. புதிய தொழில் ஆரம்பிக்கும் முயற்ச்சியில் இருப்பவர்களுக்கு அமோக லாபம் கிடைக்கப்போகின்றது.
குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். தலைமைத்துவத்தை கொடுக்கும் சூரியனும், செல்வ செழிப்பை கொடுக்கும் குருவும் இணைவதால் இவர்கள் வாழ்வில் பொற்காலம் ஆரம்பிக்கப்போகின்றது.
தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியன் மற்றும் குருவின் மகா சேர்க்கையால் வணிக ரீதியில் எதிர்பார அளவுக்கு சாதக பலன்கள் கிடைக்கப்போகின்றது.
இவர்களின் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக அமையப்போகின்றது. இவர்கள் வாழ்வில் நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
பல வழிகளில் இருந்தும் வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உருவாகும்.குருவின் ஆசியால் தங்கம் வாங்குவீர்கள். தலைமை பொறுப்புகளில் அமர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
கடகம்

கடக ராசியினருக்கு இந்த சூரியன், குருவின் சேர்க்கை சிறப்பான வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றது.
குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி செய்திகள் கிடைப்பதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.ஏற்கனவே செய்திருந்த முதலீடுகளிலிருந்து எதிர்பாராக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
உடல் ஆரோக்கியம் மற்றும் நிதி நிலை என்பன திருப்திகரமாக இருக்கும்.திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |