இந்திய ரயில்வேயின் ராஜா: இதற்காக மற்ற அனைத்து ரயில்களும் விலகிச் செல்லணுமா!
அதிக சனத்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கும் இந்தியாவில் ரயிலில் பயணம் என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதி என்றால் மிகையாகாது.
இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். தற்போது இந்தியாவில் மொத்தம் 22,593 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் 13, 452 ரயில்கள் பயணிகள் ரயிலாகும். இந்த ரயில்களில் தினம்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.

சொல்லப்போனால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது இந்தியாவின் ரயில்வே நிர்வாகம்தான். அந்தவகையில் இந்தியாவின் பல பிரபலமான ரயில்கள் அவற்றின் வேகம், வசதி மற்றும் சிறப்பு சேவைகளுக்கு பெயர் பெற்றவையாகும்.
அப்படி இந்திய ரயில்களின் ராஜா என்று அறியப்படும் ரயில் எது என்பது பற்றியும் இது தொடர்ப்பாக பல சுவாரஸ்யமான விடயங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகின் நான்காவது பெரிய ரயில்வே வலையமைப்பை இந்தியா கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்துடன், இந்திய ரயில்வே தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது, பயணிகளுக்கு வசதியான, வேகமான மற்றும் அரச பயணங்களை வழங்குவதற்காக ஆடம்பர மற்றும் அதிவேக சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய ரயில்வேயின் ராஜா
இந்திய ரயில்வேயின் ராஜா என்று அழைக்கப்படும் ரயில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ். இது இந்தியாவின் வேகமான, மிகவும் வசதியான மற்றும் மிக முக்கியமான ரயில்களில் ஒன்றாக இருப்பதால் இது ராஜா என்று அழைக்கப்படுகிறது.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் புது தில்லியை முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது மற்றும் எப்போதும் ரயில் பாதைகளில் முதலிடம் பெறுகிறது.
"ராஜ்தானி" என்ற வார்த்தைக்கு தலைநகரம் என்று பொருள், மேலும் இந்த ரயில் இந்தியாவின் தலைநகரை பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களுடன் இணைக்கிறது.
இது ரயில்வே பயணத்தில் இந்தியாவின் பெருமையை பிரதிபலிக்கிறது மற்றும் அதன் நேரம் தவறாமை, தரமான சேவை மற்றும் நேர்த்தியான பயண அனுபவத்திற்காக அது மக்களால் போற்றப்படுகிறது.

அதன் சுத்தமான பெட்டிகள், சுவையான உணவுகள் மற்றும் சரியான நேரத்தில் சேவை ஆகியவை பயணிகளுக்கு ஒரு அரச மற்றும் நம்பகமான தேர்வாக அமைகின்றமையால் இது முக்கியத்தும் மற்றும் சிறப்பு பெயர் பெற்று விளங்குகின்றது.
முதல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 1969 மார்ச் 3ஆம் திகதி அன்று புது டெல்லியை ஹவுராவுடன் இணைக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்து.

இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் பாதைகளில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மணிக்கு 130-140 கிமீ வேகத்தில் இயங்குகின்றது.
இந்தியாவின் முதல் முழுமையாக குளிரூட்டப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் என்ற பெருமையையும் இது கொண்டுள்ளது, மேலும் வேறு எந்த ரயிலும் அதன் பாதையில் அதை முந்திச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |