பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் எனவும், ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் எனவும் ஆசை இருப்பது மிகவும் இயல்பான விடயம் தான்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே பணத்தை சாம்பாதிப்பதை விடவும் செலவு செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி தங்களுக்காகவும் சரி மற்றவர்களுக்காகவும் சரி பணத்தை கணக்கு வழக்கின்றி தாராளமாக செலவு செய்யும் உன்னத குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினர், இயல்பாகவே தலைமைத்துவ குணங்கள் நிறைந்தவர்களாகவும், பணத்தை எளிதில் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் பளபளப்பான ஆடைகளையும் பளபளப்பான நகைகளையும் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சொகுசாக வாழவேண்டும் என்ற ஆசை கொண்ட இவர்கள் எப்போதுமே பணத்தை ஆடம்பர தேவைகளுக்காக அதிகமாக பயன்படுத்துவார்கள்.
அவர்கள் ஒரு கடைக்குச் சென்றால், அவர்கள் தேவையில்லாத பொருட்களைப் பைகளுடன் விட்டுவிடுகிறார்கள். செலவழிப்பவராக இருப்பது அவர்களின் பாணியாக இருக்கும். மற்றவர்களுக்காக பணத்தை செலவிடுவதிலும் இவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் சாகச குணத்துக்கு பெயர் பெற்றவர்கள் என்பதால், வேடிக்கையான அனுபவங்களை பெறுவதற்கு பணத்தை மாறுமாறாக செலவிடுவார்கள்.
இவர்கள் பணத்தை செலவு செய்வதில் மட்டுமல்லாது சம்பாதிப்பதிலும் கில்லாடிகளாகத்தான் இருப்பார்கள். கொடுக்க கொடுக்க பணம் சேரும் என்ற கொள்கை இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
தொலைதூர பயணத்தை முன்பதிவு செய்ய இவர்கள் எப்போதும் தயாராகவே இருப்பார்கள். இவர்கள் பயணம் செய்வதற்கும் சுவையாக சாப்பிடுவதற்கும் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கும் பணத்தை செலவிட ஒருபோதும் தயக்கம் காட்டுவது கிடையாது.
துலாம்
துலாம் ராசியில் ஆடம்பரமான உடைகள், வசதியான வீட்டு அலங்காரம் அல்லது நண்பர்களுக்கு பரிசுகள் என்று பல வகைகளிலும் பணத்தை ஆடம்பரமாக செலவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் ஆடம்பரத்தை விரும்புகிறார்கள், ஆனால் அது நியாயமான வழியில் ஈட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் பணத்தை சம்பாதித்து சேமித்து வைப்பதை விடவும் பணத்தை செலவு செய்யும் போது தான் அதிக மகிழ்ச்சியை அனுபவிக்கின்றார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |