தேவசேனா பாணியில் சீரியல் நடிகை ஆல்யா மானசா செய்த வேலை! கலாய்த்து தள்ளிய கணவர்
சீரியல் நடிகை ஆல்யா மானசா, பாகுபலி திரைப்பட தேவசேனா பாணியில் அம்புவிட்டதை அவரின் கணவர் குறும்புத்தனமான பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆல்யா மானசா
ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையிலும் ஜெயித்து வருபவர் தான் ஆல்யா மானசா.
ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.
இனியா' தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்துக் வருந்தார். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.
அதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.
இந்நிலையில், தற்போது ஆல்யா மானசா ஜீ தமிழில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்த தொடரில் காது கேட்காத நபராக நடிக்கிறார். அந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.
இந்நிலையில், பாகு பலி திரைப்பட தேவசேனா பாணியில் அம்புவிட்டு ஆல்யா மானசா தனது சமூகவலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணைத்தில் லைக்குகளை குவித்துவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |