இந்த ராசி பெண்களுக்கு 2025 இல் திருமணயோகம் காத்திருக்குதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜோதிட கணிப்பின் அடிப்படையில், குறிப்பிட்ட சில பெண் ராசியினருக்கு திருமணயோகம் கைகூடி வரும் என குறிப்பிடப்படுகின்றது.
அப்படி அடுத்த ஆண்டில் மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையை கரம் பிடிக்கப்போகும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே அன்பானவர்களாகவும், பாசத்துக்காக ஏங்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் .
அனைவரையும் சமத்துவத்துன் நடத்த நினைக்கு இவர்கள் வாழ்க்கை துணையிடம் மரியாதையை மட்டும் அதிகம் எதிர்ப்பார்பார்கள்.
2025 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருயோகம் சிறப்பாக இருப்பதால், திருமணத்துக்காக காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.
இவர்களின் குணத்திற்கும், எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ற கணவனை அடுத்த ஆண்டில் கரம் பிடிக்கும் வாய்ப்பு காப்படுகின்றது.
கடகம்
கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு 2025 ஆம் ஆண்டு நன்மைகள் நிறைந்த ஆண்டாக அமையும்.குறிப்பாக திருமணம் சம்பந்தமான நீண்ம நாள் எதிர்ப்பார்ப்பு நிறைவேறும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இந்த ராசி பெண்களுக்கு மற்றவர்களின் வார்த்தைகளை கேட்டு நடக்கும் குணம் இயல்பாகவே இருக்கும்.
2025 இவர்களின் மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையை கொடுக்கும் பொன்னான வருடமாக அமையப்போகின்றது. இவர்கள் திருமணத்தால் மிகுந்த மகிழ்ச்சியடையப்போகின்றார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த பெண்கள் காதல் விடயத்தில் மிகவும் விசவாசமும் நேர்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
காதலாக இருந்தாலும் சரி, திருமணமாக இருந்தாலும் சரி, அதன் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி பெண்களுக்கு 2025 ஆம் ஆண்டில் தங்களின் விருப்பதிற்கு ஏற்ற வாழ்க்கை துணையை திருமணம் செய்துக்கொள்ளும் பொன்னாக யோகம் கிடைக்கப்போகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |