2025 இல் தொழிலில் பிரச்சினைகளை சந்திக்க போகும் 3 ராசியினர்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் நிலையானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
இன்னும் சில நாட்களில் புதிய ஆண்டில் கால்பதிக்கப்போகின்றோம். பெரும்பாலானர்கள் அடுத்த ஆண்டு எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதை தெரிந்துக்கெள்வதற்கான வருட ராசிப்பலனை அறிந்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் முக்கியமாக நிதி நிலை எப்படி இருக்கும் என்று தான் ஆராய்வார்கள்.பணவரவு சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்க வேண்டும். இலாவிடில் நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும்.
2025 ஆம் ஆண்டுக்கான ராசிபலன் கணிப்புகளின் பிரகாரம் கிரக நிலைகளின் அடிப்பமையில், தொழில் விடயத்தில் அதிக பிரச்சினைகளையும் சவால்களையும் சந்திக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு தொழில் ரீதியில் பல்வேறு கடினமான சூழலை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
தொழிலில் வெற்றி அடைவதற்கு மிகப்பெரும் பேராட்டங்களை சந்திக்க வேண்டி ஏற்படலாம். நிறுவனங்களில் தொழில் புரிபவர்களுக்கு மேலதிகாரிகளினால் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமான இருக்கும்.
அதனால் வேலையை மாற்றும் முயற்சியில் ஈடுப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவும் வாய்ப்பு காணப்படுகின்றது.
ஆனால் 2025 ஆம் ஆண்டு தொழில் ரீதியின் முன்னேற்றத்தை கொடுக்காது என்பதால் இருக்கும் வேலையை தக்கவைத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இவர்கள் ஜூலை 2025 முதல் நவம்பர் 2025 வரையில் பல்வேறு போராட்டங்களை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் 2025 ஆம் ஆண்டில் தொழில் விடயத்தில் மந்தமான சூழலை சந்திக்க வேண்டி ஏற்படும்.
எப்போதும் எதையாவது சிந்திக்த வண்ணம் சோம்பேறித்தனத்துடன் இருக்க வேண்டி ஏற்படலாம். தொழிலில் கவனம் செலுத்த முடியாத நிலை மனநிலையில் இருப்பார்கள்.
வியாபாரத்தில் ஈடுப்படுபவர்களுக்கும் 2025 ஆம் ஆண்டு பெரிதாக நல்ல பலன்கள் கிடைக்காது. அலுவலகத்தொழில் புரிபவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.
கன்னி
கன்னி ராசிக்காயில் பிறந்தவர்களுக்கு எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் பணியிடத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டு முழுவதுமே தொழிலில் பல்வேறு தடைகளையும், சவால்களையும் சந்திக்க வேண்டி ஏற்படலாம்.
இவர்கள் எடுக்கும் தொழில் முயற்சிககள் அனைத்தும் தோல்வில் முடிவடைவதால், தொழிலை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |