காதலுக்காக உயிரையும் கொடுக்கும் பெண் ராசிகள்! இவங்க கிடைச்சா விட்டுறாதீங்க
பொதுவாகவே ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி தனக்கு வரப்போகும் வாழ்க்கை துணை தங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
ஆனால் ஆசைப்படும் அனைவருக்குமே அவ்வாறான வாழ்க்கை துணை கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் காதலுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்களாம்.

அப்படி வாழ்க்கை துணைக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசி பெண்கள் காதல் மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால், இயல்பாகவே இவர்ளுக்கு காதல் மற்றும் திருமண பந்தத்தின் மீது அதீத மதிப்பும் மரியாதையும் இருக்கும்.
இந்த ராசி பெண்கள் இறுதிவரை ஒரு நபரை தான் காதலிப்பார்களாம். இவர்களிடம் இருக்கும் அதிக நேர்மையும் யாரையும் ஏமாற்றிவிட கூடாது என்ற எண்ணமும் இவர்களின் இந்த இயல்புக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
இவர்களுக்கு காதல் மீதான ஆர்வம் இயல்பிலேயே இருந்தாலும் கூட தனது வாழ்க்கை துணையை தெரிவு செய்வதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இறுதிவரையில் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பார்கள்.
கடகம்

கடக ராசி பெண்கள் பிறப்பிலேயே அன்பாக குணம் கொண்டவர்களாகவும் அன்புக்காக ஏங்குபவர்களாகவும் அறியப்படுகின்றார்கள்.
இந்த ராசி பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபடக்கூடியவர்களாகவும், பிற ராசிகளை விட காதலில் மிகவும் தீவிரமானவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் துணைக்கு எந்த நிலையிலும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் அகராதியில் துரோகம் என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது.
சிம்மம்

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசி பெண்கள் அனைத்து விஷயங்களிலும் ஆதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அது போல் தான் காதல் விடயத்திலும் தீவிரமான ஈடுபாடு இவர்களுக்கு இருக்கும்.
ஆனால் காதல் என்று வந்துவிட்டால், விளையாட்டாக இல்லாமல் மிகவும் நேர்மையாகவும் விசுவாசமாகவும் நடந்துக்கொள்வார்கள்.
இவர்களின் விருப்பப்படி தங்களின் வாழ்க்கை துணை நடக்காவிட்டாலும், அவர்கள் காதலில் நம்பிக்கையை இழப்பதில்லை. இறுதிவரையில் காதலுக்காக போராடும் குணம் இவர்களிடம் நிச்சம் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |