டயட்டும் உடற்பயிற்சியும் வேண்டாம்! இதை செய்தே உடல் எடையை குறைக்கலாம்னு தெரியுமா?
பொதுவாகவே ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி தங்களின் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
ஆனால் தற்காலதில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அதனால் பெரும்பாலானவர்களுக்கு தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிப்பு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது.
உடல் எடை அதிகரிப்பு பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக இருப்பாதால், அதனை கட்டுப்படுத்த உடற்பயிற்ச்சி செய்ய வேண்டியதும், முறையான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

ஆனால் வேலைப்பளு காரணமாக பலருக்கும் முறையான உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை.
இன்னும் சிலர் உணவில் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பார்கள். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் வகையில், எந்தவித உணவு கட்டுப்பாடுகளும் இன்றி எவ்வாறு உடல் எடையை கட்டுக்குள் வைப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்.

எடையைக் குறைக்கும் எளிய வழிகள்
தினசரி உணவில் ஃப்ரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் (Whole Grains), மெலிந்த புரதங்கள் (Lean Proteins) மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த முறையை பின்பற்றுவதால், உணவை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக பசியை கட்டுக்குள் வைக்க முடியும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் நேரம் ஆற்றலை வழங்குவதோடு, துரித உணவுகள் மீதான ஆசையையும் குறைப்பதில் ஆற்றல் காட்டுகின்றது. மேலும் இது நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகின்றது.

குறிப்பாக எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால் சாப்பிடும்போது உணவை ருசித்து, அதன் மீது முழு கவனம் செலுத்தி சாப்பிடுட வேண்டும். சமூக வலைத்தளங்களை பார்த்தப்படியோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தப்படியோ சாப்பிடுவதால், எவ்வளவு சாப்பிடுகின்றோம் என்று கணக்கே இல்லாமல் பசி போன பின்னரும் சாப்பிடுக்கொண்டிருக்க நேரிடும்.
உங்களுக்கு எப்போது பசி அடங்கியது, வயிறு நிரம்பியது என்பதற்கான உடலின் சிக்னல்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், உணவில் மீது கவனம் வைத்து சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினசரி சுறுசுறுப்பான செயல்பாடு மிகவும் முக்கியமாகின்றது அதற்கான ஜிம்மில் தான் மணிக்கணக்கில் செலவிட வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. நடனம், யோகா, நீச்சல் அல்லது உங்களுக்குப் பிடித்த வேறு ஏதேனும் செயலில் ஈடுபட்டு உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முயற்சிக்கலாம். இதுவும் உடல் எடையை வெகுவாக குறைப்பதற்கு உதவும்.

தினமும் சிறிய தூரம் நடப்பது, போதுமான மற்றும் தரமான தூக்கம் என்பவற்றை சரியாக கடைப்பிடிப்பதாலும் உடல் எடையை வெகுவாக குறைத்து கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற முடியும். குறிப்பாக போதுமான தூக்கம் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களைச் சமநிலையில் வைக்கிறது. எனவே எடையை குறைக்க உணவை கட்டுப்படுத்துவதை விட்டு விட்டு இனி பசியை சரியான முறையில் கையாளும் வித்தையை கற்றுக்கொள்ளுங்கள்.

மன அழுத்தத்தின் காரணமாக கூட சிலர் அதிகமாகச் சாப்பிட ஆரம்பிக்கின்றனர். குறிப்பாக, இனிப்புகளுக்கான ஏக்கம் அதிகரிக்கும். இப்படிப்பட்ட சமயங்களில், தியானம், ஆழ்ந்த சுவாசம் அல்லது நாட்குறிப்பு எழுதுதல் (Journaling) போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு மன அழுத்தத்தை குறைத்தால் உடல் எடை தானாகவே குறைய ஆரம்பிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |