கொலஸ்டிரால் பிரச்சினைக்கு முடிவு கட்டனுமா? அப்போ இந்த காய்கறிகளை தவிர்க்காதீர்கள்
உடல் இயக்கத்திற்கு, சரும பாதுகாப்பிற்கு என பல விஷயங்களுக்கு கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு அத்தியாவசியமான சத்துப் பொருள் ஆகும்.
எனினும், இது உடலில் மிகுதியாக இருக்கும் போது பல்வேறு உடல்நல பிரச்சினைகளைக் கொண்டு வருவதோடு, இறுதியாக உயிரிழப்பை கூட ஏற்படுத்தி விடும்.
அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் ரத்த நாளங்களில் அது படியத் தொடங்கும். சில சமயம், இந்த படிமங்கள் உடைந்து, கட்டியாக மாறிவிடும். அந்த சமயத்தில் தான் மாரடைப்பு அல்லது ஸ்டிரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அபாய அளவுக்கு கீழாக கொலஸ்ட்ரால் அளவை பராமரிப்பது மிக, மிக கட்டாயமாகும். முறையற்ற வாழ்வியல் பழக்க, வழக்கங்கள் தான் இதற்கு காரணமாகும். குறிப்பாக புகைப்பிடித்தல், உடல் இயக்கமின்றி இருத்தல், உடல் பருமன் போன்றவை காரணமாக அதிகரிக்கும்.
ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, மருந்துகள் போன்றவற்றின் மூலமாக இதை கட்டுப்படுத்தலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் விரைவாக குறைக்கக் கூடிய சில காய்கறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பீன்ஸ்
வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இதனை உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, இரத்த நாளங்கள் வலுவடைகின்றன. இது செரிமான அமைப்பை வலுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
வெண்டைக்காய்
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையில் வெண்டைக்காய் உட்கொள்வது நன்மை பயக்கும். இதில் காணப்படும் ஜெல் போன்ற பொருள் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது. எனவே, நீங்கள் உங்கள் உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்க்க வேண்டும்.
ப்ரோக்கோலி
ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள காய்கறி. இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனை உட்கொள்வதால் உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, இதய நோய்கள் வருவதைக் குறைக்கும்.
முருங்கை
அதில் அதிகளவு வைட்டமின் ஏ, பி, சி, ஈ, இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் உள்ளது. இது தவிர, முருங்கைக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், இரத்த தமனிகளின் சுவர்களில் கொலஸ்ட்ரால் சேராமல் இது தடுக்கிறது. இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. கெட்ட கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
பூண்டு
இதில் ஹைப்பர்லிபிடெமியா உள்ளது, இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும், உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |