சாணக்கிய நீதி: நிம்மதியான வாழ்கை வேண்டுமா? அப்போ இந்த நபர்களை தவிர்த்திடுங்க...
முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.இதனை பின்பற்றிய பலரும் வாழ்வில் வெற்றியடைந்தமைக்கான சான்றுகளும் இருக்கின்றன.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் வாழ்வில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் முக்கியமாக சில குணங்கள் கொண்ட நபர்களை உங்கள் வாழ்வில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்கின்றார் சாணக்கியர். அதன் பிரகாரம் வாழ்வில் தவிர்க்க வேண்டிய நபர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
யாருடைய பேச்சையும் கேட்காதவர்கள்
வாழ்வில் யாரைப்பற்றியும் கவலைப்படாதவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களின் முட்டாள்தனமாக வாழ்க்கை முறை அவர்களை மட்டுமல்லாது தங்களை சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையையும் அழித்துவிடும்.
இவர்கள் முட்டாள்தனமான சீடனுக்கு ஒப்பானவர்கள் இவர்களுக்கு அறிவுரை கூறுவதால் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் தங்களுக்கு என்ன தோன்றுகின்றதோ அதை செய்ய நினைப்பவர்கள் அதனால் யார் பாதிக்கப்பட்டாலும் இவர்கள் கவலைப்பட போவதில்லை.
நிம்மதியானதும் அமைதியானதுமான வாழ்க்கை வேண்டுமானால் இந்த குணம் கொண்டவர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.
அக்கறையில்லாத பெண்கள்
குடும்பத்தின் மீது அக்கறை இல்லாத பெண்கள் வாழ்வில் மொத்த நிம்மதியையும் கெடுத்துவிடுவார்கள். யாருடைய பேச்சையும் கேட்காமல் தன் விருப்பத்திற்கு வாழும் பெண் மற்றவர்களுக்கு ஒருபோதும் மகிழ்ச்சியை கொடுக்க மாட்டார். குடும்ப வாழ்க்கைக்குள் வந்த பின்னரும் கணவன் மற்றும் பிள்ளளைகள் மீது அக்கறை இல்லாத பெண்களை நிச்சயம் வாழ்வில் தவிர்த்துவிட வேண்டும். என்கின்றார் சாணக்கியர்.
பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள்
பணம் வாழ்வில் மிகவும் முக்கியமான விடயம் தான் ஆனால் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
விரும்பி பொருட்களை கூட வாங்காமல் எப்போதும் பணத்தை சேமிப்பதை மட்டுமே இலக்காக கொண்டவர்களால் யாரையும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது. அவர்களும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
வாழும் காலத்தில் தங்கள் பணத்தை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த மறுக்கும் நபர்களின் பணம் அவர்கள் இறந்த பிறகு மற்றவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் எப்போதும் மனநிம்மதியில்லாமல் இருப்பார்கள். இவர்களை நிச்சயம் தவிர்த்துவிட வேண்டும்.
எப்போதும் மற்றவர்களை குறை கூறுபவர்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம் பிரச்சனைகளை எண்ணி, எப்போதும் எதிர்மறையான விஷயங்களில் மாத்திரமே அக்கறை செலுத்துபவர்களிடமிந்து எப்போதும் விலகியிருக்க வேண்டும்.
அப்படிப்பட்டவர் வாழ்வில் இருந்தால் நம்மால் எந்த நல்ல விடயத்தையும் செய்ய முடியாது. அவர்களின் எதிர்மறை குணங்கள் உங்களிடமும் பரவ ஆரம்பித்துவிடும். இப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகியிருப்பது நிம்மதியான வாழ்க்கைக்கு துணைப்புரியும்.
பேராசைக் கொண்டவர்கள்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் பொறாமை மற்றும் பேராசை கொண்டவர்களிடமிருந்து எப்போதும் விலகியிருப்பதே சிறந்தது. வாழ்வில் எந்த கடினமான சூழ்நிலை ஏற்ப்பட்டாலும் இத்ததைய நபர்களிடம் தவறியும் உதவிக் கேட்க கூடாது.
இவர்கள் நிச்சயம் போராசையால் ஆபத்தை ஏற்படுத்திவிடுவார்கள். இவர்களால் மற்றவர்களின் மகிழ்ச்சியை பார்த்து ஒருபோதும் மகிழ்ச்சியடைய முடியாது. நிம்மதியான வாழ்க்கைக்கு இவர்ககளை தவிர்த்துவிட வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |