தீபாவளி அன்று எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்து பூஜை செய்யலாம்?
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் எண்ணெய் தேய்த்து குளித்து பூஜை செய்வதற்கு உகந்த நேரத்தை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பண்டிகை என்றாலே மக்களுக்கு கொண்டாட்டமாகவே இருக்கும். அதிலும் இந்துக்கள் விரும்பி கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி.
தீபாவளி என்றாலே குழந்தைகளுக்கு பட்டாசு வெடிப்பது தான் ஞாபகம் வருவதுடன், பெற்றோர்களை தொந்தரவு செய்து தனக்கு பிடித்தமான பட்டாசுகளையும் வாங்கிக் கொள்வார்கள்.
மேலும் தீபாவளி அன்று மிகவும் முக்கியமான ஒன்று தான் எண்ணெய் குளியல் மற்றும் பூஜை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தன்று வரும் தீபாவளியை அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டாடுவார்கள்.
ஆனால் நாம் எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், பூஜை செய்ய வேண்டும், புத்தாடை அணிய வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
எப்போது எண்ணெய் குளியல்?
தீபாவளி பண்டிகையானது அதிகாலை 3 மணிக்கே தொடங்கிவிடுகின்றது. அன்று நல்லெண்ணெய் தேய்த்து, சீகக்காய் கொண்டு தேய்த்து குளிப்பது மிகவும் முக்கியமாகும்.
அதிகாலை குளிப்பதை கங்காஸ்நானம் என்று கூறுவார்கள். அதாவது எண்ணெய் தேய்த்து, சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும். அதாவது கங்கா தேவி அன்றைய தினம் சுடுதண்ணீரில் வாசம் செய்வாராம்.
அதிகாலை 3 மணி முதல் 5.30 மணி வரை எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறந்ததாகும்.
பூஜை செய்யும் நேரம்
எண்ணெய் தேய்த்து குளித்து முடித்ததும் பூஜை செய்வதற்கு ஏற்ற நேரமாக காலை 4 மணியிலிருந்து 6 மணி வரை என்று கூறப்படுகின்றது.
அவ்வாறு அதிகாலையில் பூஜை செய்ய இயலாதவர்கள் காலை 9.10 மணி முதல் 10.20 வரை பூஜை செய்து வழிபடலாம். பெரும்பாலும் அதிகமாக பூக்கல் அலங்காரம், அகல் விளக்குகள் இவை இருப்பது மிகவும் அவசியமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
