இதய அறுவை சிகிச்சை- ஒரு நிமிடம் கை கழுவுவது ஏன் தெரியுமா?
வழக்கமாக சிகிச்சைகள் போல் அல்லாமல் மனிதர்களின் உயிருடன் போராடும் போராட்டமே இதய அறுவைச் சிகிச்சை.
இந்த அறுவை சிகிச்சை மற்ற உறுப்புக்களை போல் அல்லாமல் மிக நுணுக்கமாக இருப்பது அவசியம்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பொழுது ஒரு நிமிடம் கைகளை சுத்தம் செய்வது ஏன் பலருக்கும் சந்தேகம் இருந்திருக்கும். இதற்கு நிபுணர் ஒருவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில், இதய நோயாருக்கு அறுவை சிகிச்சை செய்யும் முன்னர் மருத்துவர் கடைபிடிக்கும் ஒழுங்குமுறைகளை எமது பதிவில் நீங்கள் விளக்கமாக பார்க்கலாம்.
கைகளை கழுவுதல்.
அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒவ்வொரு அறுவை சிகிச்சை செய்யும் முன்னரும் அவர்களுடைய கைகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்வார்கள். ஏனெனின் தோலில் இயற்கையாகவே ஏற்படும் நுண்ணுயிரிகள், பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் மற்றும் நோய்க்கிருமிகள் ஆகியன நிறைந்திருக்கும்.
எனவே கைகளை கழுவாமல் சிகிச்சை செய்ய துவங்கினால் நோயாளிக்கு தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன் கைகளை சுத்தம் செய்து விட்டால் தொற்றுக்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
இப்படி சுத்தம் செய்யும் பொழுது ஆன்டிமைக்ரோபியல் சோப் அல்லது ஆல்கஹால் பேஸ்டு சர்ஜிக்கல் ஜெல் ஆகியவற்றை பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு கையையும் விரல் நுனி முதல் முழங்கை வரை சுத்தம் செய்திருப்பது அவசியம்.
இதய அறுவை சிகிச்சை நிபுணர்களின் கூற்றுப்படி, “ சிகிச்சை ஆரம்பிப்பதற்கு ஒரு நிமிடம் கைகளை கழுவியிருக்க வேண்டும். தவறும் பொழுது நோயாளிக்கு தொற்றுநோய்கள் வர வாய்ப்பு உள்ளது..” என எச்சரித்துள்ளனர்.
ஒரு நிமிடம் ஏன் முக்கியம்?
பைபாஸ்கள் மற்றும் வால்வு ரிப்பேர் போன்ற சிகிச்சைகள் சுத்தமான கைகளை பயன்படுத்தி செய்யும் சமயத்தில் நோயாளிகள் பலவீனமானவர்கள் என்றால் அவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இந்த நிலைமை தெரியாமல் கைகளை கழுவாமல் சிகிச்சை செய்யும் பொழுது சர்ஜிக்கல் சைட் இன்பெக்ஷன் (SSI, என்டோகார்டிடிஸ் அல்லது செப்சிஸ் போன்ற பிரச்சினைகள் வரவும் வாய்ப்பு உள்ளது.
குறைந்தபட்சம் 60 விநாடிகள் குளோர்ஹெக்ஸிடின் குளூகோனேட் அல்லது பொவிடோன்-அயோடைன் போன்ற ஆன்டிமைக்ரோபியல் பொருள்களை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தியிருப்பது அவசியம்.
30 விநாடிகளுக்குக் குறைவாக தேய்த்தால் பாக்டீரியாக்கள் கையில் தான் இருக்கும். இரண்டு நிமிடங்களுக்கு மேல் தேய்ப்பது தோலின் பாதுகாப்பு அடுக்கில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆப்ரேட்டிங் ரூம் மாற்றங்கள்
தொழில்நுட்பம் அடுத்தடுத்து வளர்ந்து கொண்டு போவதால் மருத்துவமனைகளில் பாரம்பரிய சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆல்கஹால் அடிப்படையிலான ஹேண்ட் வாஷ் லிகுயிட்களை மாற்றியுள்ளன.
இது போன்ற தயாரிப்புக்கள் ஒரே நிமிடத்தில் பாக்டீரியாக்களை ஓட விடும் திறன் கொண்டது. ஆனால் 60 வினாடிகள் குறையாமல் கைகளை கழுவ வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
