கொய்யா சாப்பிட சரியான நேரம் எதுன்னு தெரியுமா? காரணம் இது தான்!
பொதுவாகவே அனைவராலும் விரும்பப்படும் ஒரு பழம் தான் கொய்யா. இது எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்ககூடிய ஊட்டச்சத்துக்கள் சிறைந்த ஒரு ஆரோக்கியயமான பழமாக பார்க்கப்படுகின்றது.
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் வழங்குகின்றது. கொய்யாவின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
கொய்யாவில் அதிக வைட்டமின் சி நிறைந்துள்ளது.அதனால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பெரிதும் துணைப்புரிகின்றது.
நார்ச்சத்து அதிகம் கொண்ட கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் செறிவாக காணப்படுகின்றது.
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கொய்யா மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது. ஒரே நாளில் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டது கொய்யாவிற்கு இருக்கின்றது.
வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் சருமம் பொலிவு பெரும். மினுமினுப்புக் கூடி, தோல் சுருக்கம் குறையும். கண் கோளாறுகள் விலகும். இது உடம்பிற்கு குளிர்ச்சியைக் கொடுக்ககூடியது.
மேலும் நார்ச்சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என முயற்சிப்பவர்களுக்கு கொய்யா மிகச்சிறந்த தெரிவாகும். செரிமான அமைப்பு தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கு கொய்யா அரும்மருந்தாக காணப்படுகின்றது.
மலச்சிக்கலின் தீவிர நிலையே மூல பிரச்சினை ஏற்பட காரணமாக அமைகின்றது. எனவே மலச்சிக்களுக்கு தீர்வு பெற தினசரி உணவில் கொய்யாவை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
கொய்யா சாப்பிட சிறந்த நேரம்
மாலையிலோ அல்லது இரவிலிலோ கொய்யா சாப்பிடுவது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
மதிய உணவு சாப்பிட்ட பின்னர் சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை சாப்பிடுவது அதன் பழனை முழுமையாக பெற்றுக்கொள்ள துணைப்புரியும்.மேலும் மருத்துவர்களின் கருத்துப்படி கொய்யா சாப்பிட சரியான நேரமாகவும் இதுவே பரிந்துரைக்கப்பகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |