மாரடைப்பை தடுக்கணுமா? வெறும் வயிற்றில் இந்த nuts சாப்பிட்டாலே போதும்
பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் முக்கிய இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக அமையும்.
தற்காலத்தில் வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
அதிகரித்த வேலைப்பளு , மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுகளின் அதிக நுகர்வு போன்ற பல்வேறு காரணங்கள் மாரடைப்புக்கு காரணமாக அமைகின்றது.
அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழந்து மாரடைப்பு ஏற்படுகின்றது.
அதாவது இதயத்துக்கு குருதியை வழங்கும் ரத்த குழாயில் ஏற்படும் தடையே மாரடைப்புக்கு காரணமாகின்றது.
இதயம் என்பது உடல் முழுவதும் தூய இரத்தத்தை பம்ப் செய்யும் உறுப்பு என்பது அனைவரும் அறிந்ததே.
தமனிகள் வழியாக குருதி இதயத்தை அடைகிறது. ஆனால் தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர ஆரம்பித்தால் இதயத்துக்கு குருதி செல்லும் பாதையில் தடை ஏற்படும். இதுவே மாரடைப்புக்கு மிக முக்கிய காரணமாக அமையும்.
எனவே உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க எந்த வகையான நட்ஸ்களை சாப்பிடுவது துணைப்புரியும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வால்நட்ஸ்
வால்நட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் உள்ள உயர்தர பருப்பு வகைகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
இது உடலில் சேமிக்கப்படும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது. இதில் அதிகளவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கின்றது.
3 வால்நட்ஸை இரவு நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பு விரைவில் இல்லாமல் போய்விடும்.
பிஸ்தா
பிஸ்தாவில் நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் ஆகியவை செறிந்து காணப்படுகின்றது.
இது உடலில் சேகரிக்கப்பட்டுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க துணைப்புரிவதுடன், மேலும் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் தடுக்கவும் பெரிதும் உதவுகின்றது.
பிஸ்தாவை இரவு தூங்கும் முன்னர் நீரில் ஊறவிட்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு அபாயம் பெரிதும் குறைகின்றது.
முந்திரி
கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த முந்திரி பருப்பில் அடங்கி இருக்கும் மெக்னீசியம் பெரிதும் துணைப்புரிகின்றது.
முந்திரியில் காணப்படும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும் உதவுவதால் கெட்ட கொழுப்பை விரைவில் கரைக்கும் ஆற்றல் இதில் காணப்படுகின்றது. ஊற வைத்த முந்திரியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு அபாயம் குறைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |