கழுகுக்கும் ராஜாளிக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா? இதுவரை பலரும் அறியாத தகவல்
'அக்சிபிட்ரிடே' என்னும், பறவை குடும்பத்தை சேர்ந்த, மிகப்பெரிய ஊன் உண்னி பயவையாக பார்கப்படுகின்றதே கழுகு. இது பறவை உலகின் அரசன் என வர்ணிக்கப்படுகின்றது.
அதிகாரம், சுதந்திரம் மற்றும் மேன்மை ஆகியவற்றின் அடையாளமாக கழுகு கருதப்படுகின்றது.
கழுகுகளால் தன்னை விட 8 மடங்கு அதிகமான எடையை தூக்கிக்கொண்டு பறக்க முடியும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இதன் கண் பார்வை திறன் மனிதனின் திறனை விட 4 மடங்கு அதிகம். அதனால் 1000 அடிக்கு மேல் இருந்தே தரையில் இருக்கும் இரையை துல்லியமாக பார்க்க முடியும். கழுகுக்கும் ராஜாளிக்கும் என்ன வித்தியாசம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
என்ன வித்தியாசம்?
கழுகுகள் எப்போதும் எலி, கோழி, முயல், பாம்புகள் மற்றும் மீனை மிகவும் விரும்பி சாப்பிடும். கழுகின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள் ஆகும்.
ஆனால் இருப்பினும் கழுகுகளுக்கு 35 வயதாகும் சந்தர்ப்பத்தில் வாழ்வா? சாவா? என்ற ஒரு நிலையைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றது.
கழுகு தன் இளைமை காலத்தில் அதாவது 35 வருடங்கள் வரையில் வேட்டையாடி ஒடி அலைந்த பின் தன் அலகு (மூக்கு) கீழ்நோக்கி மடங்கி போய் தடித்து விடும், மாமிசத்தை குத்தி கிழித்து சாப்பிட முடியாதளவுக்கு அதன் அலகு மாற்றமடைந்துவிடும்.
அடுமட்டுமன்றி இறக்கைகளும் அடர்த்தியாகிவிடுவதால் அதன் கணம் தாங்க முடியாமல் கழுகினால் பழையபடி பறக்கவே முடியாமல் போகும். நகங்கள் உதிரந்து இரையை பற்றிப்பிடிக்கவும் முடியாது.
இப்போது கழுகினால் பறந்து வேட்டையாட முடியாது, அதனால் செத்து போன பழைய உணவை சாப்பிடலாம் என நினைத்தாலும் அலகு மடங்கி போய் மாமிசத்தை கொத்த கூட முடியாமல் தவிக்கும். இப்படிப்பட்ட நிலையில் கழுகுக்கு வாழ்வா? சாவா? என்று தீர்மாணிக்கும் நேரமாக இது இருக்கும்.
இந்த நிலையில் இருந்து மீள முடியாத கழுகு உணவின்றி இறந்து விடுகின்றது. ஆனால் வாழ வேண்டும் என்று முடிவெடுக்கும் சில கழுகுகள் மலை உச்சியில் தனியாக போய் தன் அலகால் தன்னுடை இறக்கைகளை தானே பிய்த்து எறியும்.
ரத்தம் சொட்டி வரும் வலி உயிர் போகும் அளவுக்கு கடினமான இருக்கும். ஆனால் இந்த வலியை அநி்த கழுகுகள் பொருத்துக்கொள்ளும்.பிறகு தனது நகங்களை பிய்த்து போடும்.
கடைசியில் தன் வளைந்து போன அலகை வலிமையான பாறைகளில் முட்டி மோதி குத்தி உடைத்து விடுகின்றது. இப்போது எதுவும் இல்லாமல் இருக்கும். ஆனால் அதற்கு தெரியும் தன்னால் மீண்டு வர முடியும் என்று. அதன் நம்பிக்கையுடன் சில காலம் வலியுடன் போராடிக் கொண்டு காத்திருக்கும்.
சில நாட்களின் பின்னர் மீண்டும் புதிய இறக்கைகள் முளைக்கும், புதிய கூர்மையான அலகு முளைக்கும், புதிய நகங்கள் முளைக்கும்.
மீண்டும் அந்த கழுகு மறு பிறவி எடுக்கும், அதுக்கு பேர் தான் ராஜாளி எனப்படுகின்றது.அது இப்போது பார்பதற்கு மிகவும் பயங்கரமான பிரம்மாண்ட தோற்றத்துடன் இருக்கும்.
இப்போது வேட்டையாடு திறன் அதற்கு முன்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். கழுகு ராஜாளியாக மாறும் இந்த செயன்முறை மனிதர்களுக்கு மிகச்சிறந்த உதாரணமாகவும் அமைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |