குரு வக்ர பெயர்ச்சி: 12 வருடங்களுக்கு பிறகு உங்க ராசிக்கு அதிர்ஷ்டம் தருமா?
பொதுவாக ஜோதிடம் நம்முடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதன்படி, குரு பகவான் மங்களத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறார்.
இவர் சரியான திசையில் பயணிக்கும் பொழுது 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மாத்திரம் அதிர்ஷ்டத்தை கொடுப்பார். குரு பகவான் எதிர் திசையில் நகர ஆரம்பித்தால் அதனை பிற்போக்கு நிலை என்கிறார்கள்.
அப்படியாயின், இன்றைய தினம் (நவம்பர் 11 ஆம் தேதி) குரு பகவான் கடக ராசியில் இருந்து வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறார்.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா?
தற்போது நடந்து கொண்டிருக்கும் குரு வக்ர பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மாத்திரம் அதிர்ஷ்டமான பலன்கள் வீடு தேடி வரும் எனக் கூறப்படுகிறது. அப்படியான ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

| மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு.. | 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் 4 ஆம் வீட்டில் குரு வக்ர நிலையில் பயணிக்கிறார். இதன் விளைவாக அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக செய்யாமல் இருந்த வேலைகள் அனைத்தும் இந்த மாற்றத்தினால் தானாகவே செய்யப்படும். நீதி மன்றத்தில் உங்கள் நியாயத்திற்காக போராடும் நபராக இருந்தால் வக்ர நிலையில் இருந்து குரு உங்களுக்கு பலன் தரப்போகிறார். |
| துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு.. | துலாம் ராசியில் பிறந்தவர்களாக இருந்தால் உங்கள் ராசியில் 10 ஆவது வீட்டில் குரு வக்ர நிலையில் நிற்கிறார். இவர் மற்ற ராசிகளை விட உங்கள் ராசிக்கு கண்ணை மூடிக்கு கொண்டு பலன்களை குவிக்கப்போகிறார். இந்த நாட்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் நினைத்த காரியத்தை செய்யலாம். கடுமையான உழைப்பு உங்களை உயர்த்தும் என பலரும் அறிவுரை வழங்கியிருப்பார்கள். அவற்றையெல்லாம் குரு பகவான் வக்ர நிலையில் தரப்போகிறார். வேலையில் இருந்த தடைகள் கூட இந்த நாட்களில் மாயமாகும். |
| மகர ராசியில் பிறந்தவர்களுக்கு.. | மகர ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் 7 ஆவது வீட்டில் வக்ரமடைகிறார். இதன் விளைவாக இவ்வளவு நாட்களாக உங்களுக்கு இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் அனைத்தும் மாயமாகும். ஆரோக்கியத்தில் ஆட்டம் காட்டினாலும் தொழிலில் அமோகமாக இருக்கும். இந்த நாட்களில் நீங்கள் நினைத்து வைத்திருக்கும் காரியங்களை கூட செய்யலாம். உதாரணமாக, புதிதாக தொழில் கூட துவங்கலாம், உங்களை அடித்துக் கொள்ள ஆட்களே இல்லை. |
மக்களே!!
குரு வக்ர நிலையில் இருந்து குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தருவது போன்று மற்ற ராசிகளுக்கும் சிறு சிறு மாற்றங்களை தருவார். இறைவன் எப்போதும் உங்களுக்கு துணை நிற்பார் என்பதை மறந்து விடாதீர்கள்!!
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |