இந்தியாவில் பிரபலமான பிரியாணி எதுனு தெரியுமா? பிரியாணி பிரியர்களே இதோ லிஸ்ட்
இந்தியாவில் எந்த பிரியாணி மிகவும் பிரபலமானது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிரியாணி
பிரியாணி என்ற பெயரைக் கேட்டாலே அசைவ பிரியர்களில் வாயிலிருந்து உமிழ்நீர் ஊற ஆரம்பித்துவிடும். அந்த அளவிற்கு அசைவ பிரியர்களை கட்டுப்போட்டு வைத்திருக்கின்றது பிரியாணி.
பிரியாணி சாப்பாடு என்றால் அதற்கென தனி வயிறை வைத்திருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். பிரியாணியில் பல வகைகள் உள்ளது.
வெஜ் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி, சிக்கன், மட்டன், இறால் என பல தனித்தன்மையான ரெசிபிகளுடன் சமைக்கப்படுகிறது.
பிரியாணி ஈரானில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் சிலர் புலாவின் வழித்தோன்றல் என்றும் லக்னோவின் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உணவளிக்க செய்யப்பட்ட பிரியாணி என்று ஒருசாரார் கூறுகின்றனர்.
தற்போது இந்தியாவில் எந்த பிரியாணி பிரபலமானது என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் பிரபலமான பிரியாணிகள்
லக்னோவின் பிரியாணி வகையான அவதி பிரியாணி ஆகும். இவை இங்கு மிக வேகமாக சமைக்கப்படுமாம்.
கல்கத்தா பிரியாணியில், உருளைக்கிழங்கு, முட்டை மற்றும் இறைச்சி இதனுடன் சாதம் சேர்த்து தயாரிக்கப்படுவதுடன், கெவ்டா, குங்குமப்பூ மற்றும் ஜாதிகாயும் பயன்படுத்துகின்றனர்.
கேரள பிரியாணி என்று அழைக்கப்படும் மலபார் பிரியாணியில் உலர்ந்த பழங்கள் சேர்க்கப்படுவதுடன், சிறிதளவு புளிப்பும் சேர்க்கப்படுகின்றது.
[XBMO7OE
அரிசி பிரியாணி மசாலா, கோழி மற்றும் வேக வைத்த முட்டைகளை கலந்து தயாரிக்கப்படும் பிரியாணி காலிகட் பிரியாணியும் பிரபலமாகும்.
பெரும்பாலும் மக்களின் விருப்பமாக இருப்பது ஹைதராபாத் பிரியாணி... ஹைதராபாத் பகுதியின் சமையல் கலைஞர்களால் சிறப்பாக தயாரிக்கப்படும் இந்த பிரியாணி தென்னிந்தியாவில் கத்தி மற்றும் பக்கி என இரண்டு வகைகளில் கிடைக்கின்றது.
டெல்லியின் தெருக்களில் பரவலாக கிடைக்கும் பிரியாணி தான் தேகி பிரியாணி ஆகும். மிளகு சுகை கொண்ட இந்த பிரியாணி சற்று வித்தியாசமாக இருப்பதுடன், மக்களுக்கும் அதிகமாகவே பிடிக்குமாம்.
தமிழகத்தில் மிகவும் பிரபலமான பிரியாணி தலப்பாக்கட்டி பிரியாணி. நாகசாமி நாயுடு கையில் தயாராகும் நிலையில், இவர் தலைவில் தலைப்பாகை கட்டியதால் தலப்பாக்கட்டி நாசாமி நாயுடு என்று அழைக்கப்பட்டார். ஆதலால் இந்த பிரியாணிக்கு தலப்பாக்கட்டி பிரியாணி என்று பெயர் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் தோல் தொழிலின் இடமாக இருக்கும் ஆம்பூர், பிரியாணிக்கும் பெயர்போன இடமாகும். நிச்சயம் இந்த இடத்திற்கு சென்றால் இந்த பிரியாணியை நீங்கள் சுவைத்தே ஆக வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |