நினைத்தாலும் வாங்க முடியாத விலையில் விற்கப்படும் பர்கர்- ஒரு பீஸ் இத்தனை லட்சமா?
சமையல் நிபுணர் ஒருவர் செய்த பர்கர் லட்சக்கணக்கில் விற்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
டி டால்டன்ஸ் என்று பெயரிடப்பட்ட உணவகத்தின் உரிமையாளரான ராபர்ட் ஜான் டி வீன் என்பவர் அதிக விலைக்கு விற்கப்படும் பர்கரை உருவாக்கியுள்ளார்.
இந்த பர்கரில் ஒரு பீஸ் சுமார் 5,000 யூரோக்கள் விற்கப்படுகின்றது.
அதாவது இந்திய பெறுமதியில் ஒரு பீஸ் ரூ. 4.5 லட்சம் வரை விற்பனையாகின்றது.
இந்த தகவல் கேள்விப்பட்ட பலர் அப்படி என்ன தான் இந்த பர்கரில் இருக்கிறது என சிந்திப்பார்கள்.
அந்த வகையில் விலையுயர்ந்த பர்கரில் அப்படி என்ன இருக்கிறது? என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கின்னஸ் உலக சாதனை
பர்கர் பிரியர்கள் வாயடைத்து போகும் விலையில் குறித்த பர்கர் விற்கப்படுவதற்கான முக்கிய காரணம், வசதியற்ற குடும்பங்களுக்கு உதவிச் செய்வதற்காக மட்டுமே.
இன்றைய உலகில் ஆடம்பர சாப்பாட்டுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் சுவை, வடிவம், சேர்மானங்கள் உள்ளிட்டவைகளில் அடிக்கடி மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
குறித்த பர்கரின் சுவைகள் மற்றும் பொருட்களின் சிறப்பு கலவை காரணமாக அதிகமாக கவர்ந்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்து சமீபத்தில் கின்னஸ் உலக சாதனையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பர்கர், சமையல் செழுமையை மறுவரையறை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்
ஆடம்பரமான பொருட்களுக்கு ஏற்றால் போல் பர்கர் மென்மையான கேவியர் மற்றும் ருசியான கிங் நண்டு அடுக்குகளுடன் கூடிய மென்மையான வாக்யு மாட்டிறைச்சியுடன் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பர்கரின் ரொட்டி மற்றும் அதனுடன் இணைந்த ஆனியன் ரிங்ஸ் கூட அசாதாரணமானவை, டோம் பெரிக்னான் உட்செலுத்தப்பட்ட ஷாம்பெயின் மூலம் தயாரிக்கப்படுகிறது.
அதிலும் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் பர்கரின் மேல் உண்மையான தங்க இலை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சுவையில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |