சோம்பேறித்தனம் இருந்தாலும் அதிகம் சம்பாதிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... அது எப்படி?
ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பானவே சொகுசு வாழ்க்கையின் மீது அதிகம் மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அதனால் இவர்களிடம் சோம்பேறித்தனம் சற்று அதிகமாக காணப்படும்.
அப்படி உழைப்பை விடவும் சோம்பேறித்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், பிறப்பிலேயே ஆடம்பர வாழ்க்கை மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் சிறந்த நிதி முகாமைத்துவ அறிவு கொண்டவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால் கடின உடல் உழைப்பை விட புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உழைப்பதையே அதிகம் விரும்புவார்கள்.
சொகுசு வாழ்க்கையின் மீது இவர்களுக்கு இருக்கும் மோகம் இவர்களின் சோம்பேறித்தனத்தில் சிக்க வைத்துவிடுகின்றது. ஆனால் இவர்கள் கடின உழைப்பு இன்றியே ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் கற்பனை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஒரு இடத்தில் அமர்ந்தபடியே இவர்கள் ஆசைப்படும் அனைத்தையும் கற்பனையில் அனுபவித்துவிடுவார்கள்.
இந்த கனவு காணும் இயல்பு அவர்களை சோம்பேறிகளாக மாற்றிவிடுகின்றது. ஆனால் இவர்கள் பயன் அற்றவர்கள் அல்ல.
தங்களின் கனவுகளை புத்திசாலித்தனமாக சிந்தித்து நிஜமாக்கிக்கொள்ளும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். இவர்கள் குறைந்த முயற்சியிலேயே அதிக பணத்தை சம்பாதித்துவிடுவார்கள்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும் கடின உழைப்பை விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் தொழில் புரிவதை விட அதிக நேரம் எப்படி ஒய்வில் இருப்பது என்று தான் சிந்திப்பார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களை சோம்பேறிகளாக மாற்றுகின்றது.
இருப்பினும் இவர்கள் ஒய்வில் இருந்தாலும் இவர்களின் புத்திசாலித்தனமான முதலீடுகள் இவர்களுக்கு வருமானத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும். இவர்கள் வாழ்வில் பணத்துக்கு அதிகம் பேராட வேண்டியிருக்காது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |