செரிமான அமைப்பை சீராக்கும் தயிர்... இந்த நேரத்தில் மட்டும் சாப்பிடவே கூடாது!
பொதுவாகவே பாலும் பால் பொருட்களும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு பகிக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே.
செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் பாலை விடவும் தயிர் பல மடங்கு உதவுகின்றது.
காரணம் தயிரில் அதிகமான புரோபயாடிக் நிறைந்திருக்கின்றது. இது நமது குடலில் நல்ல பாக்டீரியா உற்பத்திக்கு துணை புரிகிறது.
மேலும் நமது செரிமானத்திற்கும் மெட்டபாலிஸத்திற்கும் தயிர் இன்றியமையாதது. மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்றவற்றால் போராடுபவர்களுக்கு நார்ச்சத்து மற்றும் புரோபயாடிக் நிறைந்த தயிர் ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது.
மேலும் தயிரில் நமது உடலுக்கு தேவையான பல நுண்ஊட்டச்சத்துகளும் காணப்படுகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த தயிரை தினமும் சாப்பிடலாமா?
அளவுக்கு அதிகமாக தயிரை சாப்பிட்டால் என்ன பாதிப்புகள் ஏற்படும் மற்றும் தயிரை எந்த நேரத்தில் சாப்பிடவே கூடாது? போன்ற விடயங்கள் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

அறிவு இருக்கிறவங்களுக்கு தான் புரியும்... பார்வதியை வெளுத்து வாங்கிய கனி! அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்
தயிர் சாப்பிட சில முக்கிய விதிகள்
செரிமான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் தயிருடன் வறுத்த சீரகத்தை சேர்த்து சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு இரண்டிப்பு நன்மைகளை கொடுக்கும்.
இவ்வாறு சாப்பிடுவதால், மலச்சிக்கல் அல்லது அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளைப் விரைவில் சீர் செய்து ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெறலாம்.
தயிர் இயல்பாகவே குளிச்சியான விளையை கொண்டுள்ளதால், அதனால் இரவில் சாப்பிடுவது சளி, இருமல், சைனஸ் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு பாதிப்பை மேலும் மோசமாக்கும். ஆரோக்கியமாக இருப்பவர்களும் கூட இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.
குறிப்பாக குளிர் நாட்களில், காலை வேளைகளிலும் தயிர் சாப்பிடுவதை தவிர்ப்பது சிறப்பு. தயிர் சாப்பிடுவதற்கு மிகவும் பொருத்தமான நேரம் எது என கேட்டால், மதியம் சாப்பிடுவது எப்போதும் சிறந்தது என்று கூறப்படுகிறது.
குறிப்பாக பகல் நேரத்தில், செரிமானம் சிறப்பாக இருக்கும், மேலும் உடல் தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்களை முழுமையாக உறிஞ்சுவதற்கும் துணைப்புரியும்.
தயிரில் வறுத்த சீரகம் அல்லது சீரக பொடியைச் சேர்த்து சாப்பிடும் போது செரிமானத்திற்கு அதிக நன்மை கிடைக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி தயிரில் சிறிதளவு சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவையை மட்டுமன்றி ஆரோக்கிய நன்மைகளையும் இரட்டிப்பாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |