அறிவு இருக்கிறவங்களுக்கு தான் புரியும்... பார்வதியை வெளுத்து வாங்கிய கனி! அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டின் சமையல் கட்டில் தெனாவெட்டாக அமர்ந்திருந்த பார்வதியை தாறுமாறாக கனி திட்டியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் -9
கடந்த அக்டோபர் ஐந்தாம் திகதி பிரம்பமாண்டமாக ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, தொடக்கத்தில் இருந்தே சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகின்றது.
சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறபோதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
பிக் பாஸ் பிரபல தொலைக்காடயில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இந்த சீனனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார்.கடந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதற்கு முதல் உள்ள 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் களமிறங்கினார்.அதனை தொடர்ந்து. அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
முதல்வார எவிக்ஷனுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டியிலிருந்து நந்தினி வெளியேறியிருக்கின்றார். தவிர்க்க முடியாத காரணங்கள் போட்டியாளர் நந்தினி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியிருக்கிறார்.
அதனை தொடர்ந்து நேற்றைய தினம் முதல்வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
பார்வதியை வெளுத்து வாங்கிய கனி
பிக்பாஸ் வீட்டில் 8 ஆவது நாளான இன்றும் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் சண்டைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், சமையல் கட்டில் அமர்ந்து... நா இப்படி தான் பண்ணுவேன் என திமிராக பதில் சொல்லிய பார்வதியை கனி கண்டபடி திட்டியுள்ள காட்சியுடன் இன்றை நாளுக்காக பிக்பாஸ் இரண்டாவது promo வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |