இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்!
பொதுவாகவே உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அதன் தொழிற்பாடுகளை சீராக மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாதது.
குறிப்பாக உடல் உறுப்புகளில் இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இதயம் தொடர்பான எந்த நோயும் தீவிரமாகக் கருதப்படுகிறது.
காரணம், இதய பாதிப்புகள் எதிர்பாராத நேரத்தில், மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பாதக விளைவை கொடுக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. அதனால் தான் இதய ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அந்தவகையில் இதய ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடிய முக்கிய மூன்று உணவுகள் குறித்தும், அதனை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இதய நிபுணர் அரவிந்த் துருவாசல் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஊறுகாய்
தொன்று தொட்டு தயிர் சாதத்துக்கு ஊறுகாய் தான் பெஸ்ட் காம்பினேஷன் என்றால் மிகையாகாது. நம் முன்னோர்கள் ஆரம்பித்த இந்த வழக்கம். ஆனால் இந்த ஊறுகாயை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவேர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
காரணம் வெறும் "1 ஸ்பூன் ஊறுகாயை உட்கொண்டால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மேலும் இதயம், சிறுநீரகம், மூளை போன்றவற்றில் நாள்பட்ட சேதத்தை உண்டாக்கும்" என இதய நிபுணர் குறிப்பிடுகிகின்றார். இது இதய ஆரோக்கியத்தில் நேரடியாகவே பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், ஊறுகாய் பிரியர்கள் இது குறித்து அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
அப்பளம்
இதய ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றுமொரு சைடு டிஷ் தான் அப்பளம். பெரும்பாலான வீடுகளில் மதிய உணவில் அப்பளத்தை சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பின்பற்றப்படுகின்றது.
ஆனால் அப்பளத்தில் உப்பு அதிகம் இருப்பதுடன் அதனை எண்ணெயில் பொரிக்கும் போது, ட்ரான்ஸ் கொழுப்புக்களும் அதிகம் சேர்ந்து, இரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
எனவே இதுவரை உணவில் அப்பளத்தை அதிகம் சேர்த்து சேர்த்துக்கொள்ளும் பழக்கம் உங்களுக்கு இருக்கின்றது என்றால், இனிமேல் தவிர்த்துக்கொள்ளுங்கள்.அது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அதிகரிக்கும்.
நூடுல்ஸ்
சிலருக்கு ஊறுகாய் அல்லது அப்பளத்தின் மீது ஆர்வம் இருக்காது. ஆனால் உடன் நூடுல்ஸ்களை வெளுத்து வாங்குவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இதய பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஒரு பாக்கெட் நூடுல்ஸில் ஒருவர் ஒரு நாளைக்கு சாப்பிட வேண்டிய உப்பில் பாதி அளவுக்கு மேல் இருப்பதால் அதனை தொடர்ந்து சாப்பிடும் பட்சத்தில், ரத்த அழுத்தம் அதிகரித்து இறுதியில் இதய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |