இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருந்தா உடனே நிறுத்துங்க... மூளையை பாதிக்குமாம்
பொதுவாகவே உடலின் அனைத்து செயல்களும் மூளை வழங்கும் சமிஞ்சைகளுக்கு ஏற்பவே இடம்பெறுகின்றது. மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் உடலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மூளையின் செயற்பாடுகள் சீராக இருக்கும் போது உடலின் இயக்கமும் சீராக இருக்கும். நாம் அன்றாடம் அறியாமையால் செய்கின்ற பல செயற்பாடுகள் மூளையின் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.அவ்வாறு மூளையை குழப்பும் செயற்பாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மூளையை பாதிக்கும் செயற்பாடுகள்
காலை உணவு உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதது, இரவு உணவை தவிர்த்தாலும் காலை உணவுவை ஒரு போதும் தவிர்க்க கூடாது.
காலை உணவை தவிர்ப்பதால் பசி மற்றும் உணவு சுழற்சியில் ஏற்படும் மாற்றம் காரணமாக மூளை குழம்பிப்போய் விடுகிறதாம். புகைபப்பிடிக்கும் பழக்கம் மூளையின் செயற்பாடுகளை வலுவாக பாதிக்கக் கூடிய ஒன்று.
பொதுவாகவே புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால் புகைக்காத போது இயல்பாக இருக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. புகைப்பழக்கம் மூளையை குழப்பும் காரணிகளுள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. மூளை சரியான முறையில் இயங்குவதற்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது.
அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் அதிக நேரம் கைபேசியை பார்த்துக்கொண்டிருப்பது மற்றும் அதிக நேரம் கண் விழித்து படம் பார்ப்பது போன்ற விடயங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு இன்பமாக இருந்தாலும் நாளடைவில் இது மூளை கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய விடயமாக அமையும்.
ஒரு சிலர் ஒரே நேரத்தில் பல விடயங்கள் குறித்து சிந்தித்துக்கொண்டிருப்பார்கள் அல்லது ஒரே நேரத்தில் பல வேளைகளில் ஈடுபடுவார்கள். இவ்வாறான செயற்பாடுகள் மூளையை வலுவாக பாதிக்கின்றது.
இது நாளடைவில் மூளையை குழப்ப காரணமாகிவிடும். உடலுக்கு தேவையான அளவு நீர் அருந்துவது மிகவும் இன்றியமையாத விடயமாகும், உடலுக்கு போதியளவு நீர்ச்சத்து கிடைக்காத பட்சத்தில் இது மூளையின் செயற்பாட்டில் தாக்கம் செலுத்துகின்றது.
சூரிய ஒளி உடலுக்கு மிகவும் இன்றியமையாதது, ஆனால் சூரிய ஒளியில் நின்றுக்கொண்டு கைபேசியை பயன்படுத்துவது மூளையை பாதிப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. இது நம்மை அறியாமலேயே மூளையில் குழப்ப நிலையை தோற்றுவிக்கிறது.
உடல் சோர்வாக இருக்கும் பொழுதும் சுகயீனத்தின் போதும் உடலுக்கு போதிய அளவு ஓய்வு தேவைப்படுகின்றது. அவ்வாறான சூழ்நிலையில் வேலை செய்யும் போது மூளையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு மூளை குழப்பமடைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |