சளி, இருமல் கடுமையா இருக்கா? அப்போ இந்த பழங்களை தவிர்க்காதீங்க
பொதுவாகவே குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால், வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சளி இருமல் பிரச்சினைக்கு ஆளாவது இயல்பு.
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், தொற்று நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நேரங்களில் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக்கூடிய உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆனால் சளி, இருமல் இருக்கும் போது பழங்களை சாப்பிட கூடாது என்ற தவறான புரிதல் இன்றளவும் பெரும்பாலானவர்கள் மத்தியில் இருக்கின்றது.

மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் சளி, இருமல் இருக்கும் போது அவசியம் சாப்பிட வேண்டிய குறிப்பிட்ட சில பழங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அவசியம் சாப்பிட வேண்டிய பழங்கள்
மாதுளை

மாதுளம் பழத்தில் ஆன்டிவைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருப்பதால், இந்த பழத்தை சளி பிடித்திருக்கும் போது எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
குறிப்பாக மாதுளை தொண்டை வலியை நீங்குவதோடு, சளி பிடித்திருக்கும் போது சுவை அரும்புகளை புத்துணர்வுர்வுடன் வைத்திருக்கவும், உணவின் மீது நாட்டம் அதிகரிக்கவும் துணைப்புரியும்.
மேலும் இந்த பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இவை தொற்றுகிருமிகளால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடவும் உதவுகின்றது. எனவே சளி, இருமல் இருக்கும் போது மாதுளம் பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.
கிவி பழம்

கிவி பழத்தில் வைட்டமின் சி சத்து செரிந்து காணப்படுகின்றது. இது உடலில் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. மேலும், சுவாச நோய்த்தொற்றுகளை எதிர்த்து பேராட உதவுகின்றது.
சிட்ரஸ் பழங்கள்

நமக்கு சளி பிடித்திருந்தால் நாம் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்களில் முக்கியமானது விட்டமின் சி அதிகம் நிறைந்த லெமன், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள். இதில் இருக்கும் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் விட்டமின் சி, நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளியை விரட்டும்.
அன்னாசிப்பழம்

அன்னாசிப் பழத்திலும் அதிக அளவில் விட்டமின் சி மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும். ஆனால் அன்னாசி பழத்தை நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்வது நல்லது.
மேலும் அன்னாசிப்பழத்தில் உள்ள புரோமிலைன் என்னும் நொதி பொருள் சுவாசப்பாதையில் தேங்கியுள்ள சளியை கரைத்து எளிதில் வெளியேற்ற உதவுகிறது.
பெர்ரி பழங்கள்

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை செரிந்து காணப்படுகின்றது.
அவை உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பதிலும் ஆற்றல் காட்டுவதாக மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |