சுகரை சட்டுன்னு குறைக்கும் முருங்கை கீரை சட்னி... இந்த முறையில் செய்து கொடுங்க
பொதுவாகவே முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்தும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும்,மருத்துவ நன்மைகளையும் கொண்டுள்ளது.
குறிப்பாக முருங்கைக்கீரை ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.

முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து என நிறைய ஊட்டச்சத்துக்கள் செரிந்து காணப்படுவதால், தினசரி உணவில் அதனை சேர்த்துக்காள்வது மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும், வயதானதை தாமதப்படுத்தும், வீக்கத்தைக் குறைக்கும், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கைக்கீரையை கொண்டு அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த சட்னி எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1/4 தே.கரண்டி
மிளகு - 1/4 தே.கரண்டி
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
வரமிளகாய் - 2
புளி - சிறிய துண்டு
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து லேசாக நிறம் மாறும் அளவுக்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் சீரகம், மிளகு சேர்த்து நன்றாக வறுத்து, வெங்காயம், பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் புளி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் 2 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து கீரை நன்றாக வேகும் வரையில் வதக்கி இறக்கி நன்றாக குளிரவிட வேண்டும்.

நன்கு ஆறயதும், வதக்கிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அத்துடன் துருவிய தேங்காய், சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் சிறிது தண்ணீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் ஒரு கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு பாத்திரமத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் சுவையான முருங்கைக்கீரை சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |