தலைமுடி வளர்ச்சியை ஆதரிக்கும் உணவுகள்- தினமும் சாப்பிடலாமா?
பொதுவாக பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்வு.
இந்த பிரச்சினை ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் பொழுதே உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஏகப்பட்ட பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.
தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்காக சந்தைகளில் கிடைக்கும் விதமான ஷாம்பூ, எண்ணெய் வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் இவை ஒரு சிலருக்கு மாத்திரமே சாதகமான பலன்களை தரும்.
இவற்றை தவிர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் இருந்தால் தலைமுடி உதிர்வு பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.
அப்படியாயின், முடி உதிர்தல், பளபளப்பு இழப்பு, முனை பிளவுபடுதல் ஆகிய அனைத்து பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் உணவுகள் என்னென்ன என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் உணவுகள்
1. கொட்டைகள் சாப்பிடலாம். ஏனெனின் கொட்டைகளில் புரதம், கொழுப்பு, பயோட்டின் மற்றும் துத்தநாகம் ஆகியவை உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் சத்துக்கள் உள்ளன. இவை தலைமுடி வளர்ச்சியையும் அதிகப்படுத்தும்.
2. சியா விதைகள் என்றால் பலருக்கும் எடையை குறைக்கும் பொருள் என்று தான் தெரியும். ஆனால் சியா விதைகளில் இருக்குத் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சியையும் தூண்டுகிறது. அத்துடன் சியா விதைகளில் சோயாபீன்ஸை விட 20 சதவீதம் அதிக புரதமும் உள்ளது.
3. அவகேடோவில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், இவை தலைமுடி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. இதனை ஹேர் மாஸ்க்காகவும் செய்து பயன்படுத்தலாம். கொழுப்பு மற்றும் பயோட்டின் சத்துக்களை கொண்ட இந்த பழத்தினால் தலைமுடி வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகமாகும்.
4. பதப்படுத்தப்பட்ட உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கும் முடி ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். மாறாக பெர்ரி பழங்களில் முடி உதிர்தலை அதிகப்படுத்தும் கூறுகள் உள்ளன. அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால் ஒவ்வாமை பிரச்சினைகள் இருந்தாலும் சரிச் செய்யப்படும். இந்த கலவையில் உள்ள கருப்பு திராட்சை வத்தல், சிவப்பு ராஸ்பெர்ரி, சிவப்பு திராட்சை வத்தல் மற்றும் நெல்லிக்காய்கள் தலைமுடி உதிர்வை கட்டுபடுத்துகிறது.
5. வழக்கமாக நாம் சாப்பிடும் கீரைகளிலும் பார்க்க, பச்சைக் கீரையில் வைட்டமின் பி மற்றும் சி நிறைய உள்ளன. இந்த பசலைக் கீரையில் பல அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேர்மங்கள் இருப்பதால் தலைமுடி உதிர்வு தடுக்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |