இதயத்தில் அடைப்பு இருப்பதை உறுதிச் செய்யும் அறிகுறிகள்- இனி ஜாக்கிரதை!
உலகளவில் நாளுக்கு நாள் இறப்பு வீதம் அதிகரித்து வருகின்றன.
இறப்பு வீதத்தை அதிகப்படுத்தும் இதய நோய் வருவதற்கு தமனிகளில் ஏற்படும் அடைப்புகளே முக்கிய காரணமாகி விடுகிறது.
இதயத்திற்கு செல்லும் தமனிகளில் அடைப்பு ஏற்பட நாம் உண்ணும் கொழுப்பு நிறைந்த ஜங்க் உணவுகளும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் தான் காரணிகளாகும்.
வெளியிடங்களில் கிடைக்கும் உடலுக்கு கேடு தரும் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் அதிலுள்ள கொழுப்புக்கள் சரியாக ஜீரணமாகாமல், இரத்தக்குழாய்களில் படிந்து, நாளடைவில் அடைப்பை ஏற்படுத்துகின்றன.
இதயக் குழாய்களில் அடைப்பு இருப்பதை ஒரு சில அறிகுறிகள் வைத்து கண்டறியலாம்.
அப்படியாயின், இதயத்தில் ஏற்படும் அடுப்பை என்னென்ன அறிகுறிகள் வைத்து கண்டறியலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
இதயத்தில் உள்ள அடைப்பின் அறிகுறிகள்
1. இதயக் குழாய்களில் அடைப்பு இருப்பவர்களுக்கு நெஞ்சுப் பகுதியில் வலி அல்லது இறுக்கம் இருப்பது போன்று உணர்வு ஏற்படும். இப்படியான அசௌகரியங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மன அழுத்தம் இருப்பவர்களுக்கும் நெஞ்சு வலி ஏற்படும். மருத்துவ பரிசோதனையின் பின்னர் அதனை அறிந்து கொள்ளலாம்.
2. இதயத்தில் அடைப்பு இருந்தால், இதயத்திற்கு போதுமான இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் பெற முடியாத நிலை இருக்கும். அப்படியான சமயங்களில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். இதனால் தான் சிலருக்கு நடு இரவில் மூச்சுத்திணறல் ஏற்படும்.
3. அதிக வேலை செய்யாமல் ஒருவர் மிகுந்த உடல் சோர்வு அல்லது பலவீனமாக உணர்கிறார் என்றால் அவர்களின் இதயத்திற்கு செல்லும் இரத்தம் சரியாக செல்லவில்லை என்று தான் அர்த்தம். எனவே இதயத்திற்கு செல்லும் குழாய்களில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா? என்பதனை பரிசோதிக்க வேண்டும்.
4. இதயக் குழாய்களில் அடைப்பு இருப்பவர்களுக்கு இதயத்தில் போதுமான இரத்த ஓட்டம் இருக்காது. இதன் விளைவாக மூளைக்கு செல்லும் இரத்த வீதமும் குறைவாகலாம். சிலருக்கு அடிக்கடி ஏற்படும் தலைச்சுற்றல் அல்லது மயக்கம் இதன் அறிகுறிகளாகும்.
5. இதயத்துடிப்பு மிகவும் வேகமாகவோ அல்லது சீரற்ற முறையில் துடிப்பதை அனுபவித்தால் இதயத்திற்கு செல்லும் இரத்தம் பம்ப் செய்ய போராடிக் கொண்டிருக்கிறது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதயத்திற்கு செல்லும் வழியில் ஏதேனும் அடைப்பு இருந்தால் இதயத்தின் பணியை சீராக செய்ய முடியாத நிலை ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |