மோதிர விரலில் திருமணமாகாத பெண்கள் மோதிரம் அணியலாமா? சாஸ்த்திர தவறுகள்
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி கைகள் மற்றும் கால்களில் ஆபரணங்கள் அணிவதற்கு எமது முன்னோர்கள் சில வரைமுறைகள் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் தற்போது இருக்கும் கலாச்சார மாற்றங்களினால் இவை இல்லாமல் போகின்றன. மாறாக முன்னோர்கள் அப்படி சில வரையறைகள் வைத்திருப்பதற்கு பின்னால் சில அறிவியல் காரணங்களும் உள்ளன.
உதாரணமாக, கை, கால் இரண்டிலும் உள்ள இரண்டாவது விரலில் தான் ஆபரணம் அணிய வேண்டும் எனக் கூறுவார்கள். கையில் மோதிரம் அணிவதாக இருந்தாலும், காலில் மெட்டி அணிவதாக இருந்தாலும் முதலாவது இருக்கும் விரலில் அணியக் கூடாது என்பார்கள்.
ஏனெனின் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் நமது பாதங்களில் தான் முடிவடைகிறது. அதில் பெண்களுக்கு கர்ப்பப்பையுடன் தொடர்புடைய நரம்புகளும் உள்ளன. இந்த விரலில் சிறிது அழுத்தம் கொடுத்தால் பெண்களின் கர்ப்பப்பை வலுவடைகிறது. இதனால் தான் திருமணத்திற்கு பின் காலில் மெட்டி கட்டாயம் அணிய வேண்டும் என்ற பழக்கம் கொண்டுவரப்பட்டது.
அந்த வகையில், வழக்கமாக பெண்கள் ஐந்து விரல்களிலும் தற்போது மோதிரம் அணிகிறார்கள். ஆனால் மோதிர விரலில் திருமணம் செய்யாத பெண்கள் மோதிரம் அணியக்கூடாது என்கிறார்கள். இதற்கு பின்னால் என்ன காரணம் உள்ளது என்பதையும் திருமணமாகாத பெண்கள் ஏன் மோதிரம் அணியக் கூடாது? என்பதையும் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
இடது கை விரல்
எமது சமூக கலாச்சாரப்படி, நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை அனைத்திற்கும் தம்பதிகளுக்கு இடது கை விரலில் தான் மோதிரம் அணியப்படுகிறது. ஏனெனின் இடது கை விரல்களில் மோதிரம் அணியும் பொழுது அது இதயத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.
தம்பதிகள் திருமண வாழ்க்கையில் இணையும் பொழுது அவர்களுக்கு காதல், அன்பு இருக்க வேண்டும் என்பதை அந்த மோதிரம் உணர்த்துகிறது.
நம்முடைய வலது கை உடலின் செயல்பாடுகளுடனும், இடது கை மனதின் செயல்பாடுகளுடனும் தொடர்புடையவை என்பதை தெரிந்திருக்க வேண்டும்.
மோதிரம் அணியக் கூடாத விரல்
சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது என சாஸ்த்திரம் உள்ளது. இந்த பழக்கம் நமக்கு கஷ்டங்களை கொண்டு வரும். அத்துடன் உடலின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மற்ற விரலக்ளை விட சுண்டு விரலில் மோதிரம் அணிய விரும்பினால் செம்பு உலோகத்தால் ஆன மோதிரம் அணியலாம். தங்கம் அணிந்தால் இதய சக்தி ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
திருமணமாகாத பெண்கள் மோதிர விரலில் அணியலாமா?
திருமணமான பெண்கள் மட்டுமல்லாமல் திருமணம் ஆகாத பெண்களும் மோதிர விரலில் மோதிரம் அணியலாம். மோதிர விரலில் மோதிரம் அணிவது என்பது ஒரு தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்து உள்ளது. எந்த மதம் மற்றும் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு இதற்கு எந்தவித தடையும் இருக்காது.
மோதிர விரலில் மோதிரம் அணிவது திருமணத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது, ஆனால் இது ஒரு சமூக வழக்கமே தவிர, எந்த மதத்திலும் ஒரு கட்டாய விதியாக பார்க்கப்படவில்லை. திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் விருப்பப்படி மோதிர விரலில் மோதிரம் அணியலாம்.
மோதிரம் ஒருவரின் தோற்றத்தை அழகுபடுத்தவும், அலங்கரிக்கவும் பயன்படுத்தப்படுகிற ஆபரணமாகும். தங்களின் விருப்பம் படி அணிந்து கொள்ளலாம். சிலர் மோதிரம் அணிவதால் அதிர்ஷ்டம் வரும் என்கிறார்கள். ஆனால் அது அவர்களின் நம்பிக்கையே தவிர, வேறு எந்தவித சான்றுகளும் இல்லை. எனவே, திருமணம் ஆகாத பெண்கள் மோதிர விரலில் மோதிரம் அணிவதில் எந்தத் தவறும் இல்லை என அறிவியல் கூறுகிறது. சாஸ்த்திரங்களை கடைபிடிக்க நினைப்பவர்கள் அணியாமல் இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |