ஆண்களை அதிகமாக தாக்கும் ஆபத்தான நோய்கள்... என்னென்ன தெரியுமா?
ஆண்கள் பெரும்பாலும் தங்கள் அலுவலக வேலைகள், வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதிகமாக கவனம் செலுத்துவதனால் பெரும்பாலும் தங்கள் சொந்த ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது குறைவாகவே இருக்கும்.
பொதுவாக ஆண்கள் வேலைபளு காரணமாக சரியாக சாப்பிடவோ, உடற்பயிற்சி செய்யவோ, நிம்மதியாக தூங்கவோ கூட நேரம் ஒதுக்குவதில்லை.
அத்தகைய சூழ்நிலையில், பெண்களை விட ஆண்கள் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரையும் தாக்கும் நோய்களுக்கு மத்தியில் சில நோய்கள் பெண்களை விட ஆண்களை தான் அதிகம் தாக்குகின்றது.
ஆண்கள் தங்கள் உடல் நலம் குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியமாகின்றது.அந்தவகையில் ஆண்களை குறிவைத்து தாக்கும் நோய்கள் தொடர்பில் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
ஆண்களை தாக்கும் நோய்கள்
பெண்களை விட ஆண்களையே மார்பக புற்றுநோய் அதிகமாக தாக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், ஆகியனவும் பெண்களை விட ஆண்களுக்கே அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தற்காலத்தில் நீரிழிவு நோய் பாலின வேறுபாடு இன்றி அனைவரையும் தாக்கும்.
சிறு குழந்தைகளை கூட இந்த நோய் விட்டு வைப்பதில்லை.ஆனால் ஆய்வுகளின்படி, பெண்களை விட ஆண்களுக்கு நீரிழிவு நோய் தாக்கம் அதிகம்.
முக்கியமாக டைப் 2 நீரிழிவு நமது மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால் தோன்றும்.
ஆய்வுகளின் அடிப்படையில் பெண்களுடன் ஒப்பிடும் போது, இந்த நோய் பெரும்பாலும் ஆண்களில் அதிகம் தாக்கம் செலுத்துகின்றது.
பெண்களை விட ஆண்களே அதிகம் மது அருந்துவதால் அவர்களுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பெண்களுடன் ஒப்பிடுகையில், ஆண்களுக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு, நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெண்களை விட ஆண்களுக்கு தான் வைரஸ் காய்ச்சலும் அதிகமாக தாக்குகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |