வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? இந்த திசையில் வைத்து சமைக்கக்கூடாதாம்
வீட்டில் செல்வம் நிலைப்பதற்கு சமையலறையில் நாம் உணவு சமைக்கும் அடுப்பினை எங்கு வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சமையலறை
வீட்டில் சமையலறை என்பது மிகவும் முக்கியமான பகுதியாக இருக்கின்றது. நாம் ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வதற்கு ஆரோக்கியமான உணவும் கட்டாயமாகும்.
அந்த வகையில் சமையலறையில் கூட வாஸ்து சாஸ்திரம் கட்டாயம பார்க்க வேண்டுமாம். அதாவது எந்த திசையில் சமையலறை இருக்க வேண்டும்? எங்கு நின்று சமைக்க வேண்டும்? என்பதை கூட கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எந்த திசையில் சமைக்கலாம்?
வாஸ்து படி, சமைக்கும் போது கிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டுமாம். சூரிய பகவான் கிழக்கு திசையில் வசிக்கின்றார் என்று நம்பப்படுவதுடன், இந்த திசையானது நேர்மறை ஆற்றலின் ஆதாரமாகவும் கருதப்படுகின்றது.
இந்த திசையில் இருந்து தயாரிக்கப்படும் உணவு ஆசீர்வாதத்தினை தருவதுடன், மன அழுத்தத்தினை குறைப்பதாகவும் நம்பப்படுகின்றது.
தெற்கு திசையை நோக்கி சமைத்தால் உடல் நல பிரச்சனை ஏற்படுவதாகவும், மேற்கு திசையை நோக்கி சமைத்தால், உறவுகளில் மோதல் ஏற்படும் என கூறப்படுகின்றது.
அதுமட்டுமின்றி வடக்கு திசையில் சமைக்கக்கூடாது. இவை நிதி நிலைமையை மோசமாக பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

அதே போன்று வீட்டில் உடைந்த பாத்திரம், பழைய பாத்திரங்களை சமையலறை அலமாரியில் வைப்பது நல்லதல்ல. ஏனெனில் உடைந்த பொருட்கள் எதிர்மறை ஆற்றலை வேகமாக ஈர்க்கும் என கூறப்படுகின்றது.
பாத்திரங்களை கழுவிய பின்பு கவிழ்த்து வைப்பது வழக்கம். ஆனால் சாஸ்திரப்படி இவை நல்லதல்ல என்று கூறப்படுகின்றது. இவ்வாறு செய்வதால் வறுமையை அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. ஆகவே, பாத்திரத்தை எப்போதும் நிமிர்ந்த நிலையில் வைக்க வேண்டும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |