சாணக்கிய நீதி - கணவனின் இந்த மூன்று பழக்கங்கள் விவாகரத்தை தூண்டும்
சாணக்கிய நீதி
ஆச்சார்ய சாணக்கியர் வாழ்க்கை, உறவுகள் மற்றும் திருமண உறவுகள் குறித்தும் பல கருத்துக்களை வழங்கி உள்ளார்.

சாணக்கிய நீதியின்படி, கணவன்-மனைவி உறவு என்பது நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் அமைந்தது. ஆனால், சில பழக்கவழக்கங்கள் வரம்பை மீறும்போது, மிகவும் வலுவான உறவுகள்கூட சிதைந்து போகத் தொடங்குகின்றன.
குறிப்பாகப் பெண்கள், தங்களின் சுயமரியாதையும் உணர்வுகளும் தொடர்ந்து புண்படுத்தப்படும்போது, பெரும்பாலும் பிரிந்து செல்ல முடிவெடுக்கிறார்கள். இதற்கு ஆண்களின் நடத்தை தான் காரணம்.

கணவனின் குணங்கள்
கணவன் மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் போது
- சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பெண்ணின் சுயமரியாதை மிக முக்கியமானது எனப்படுகின்றது. இந்த நிலையில் ஒரு கணவன் தன் மனைவியை மற்றவர்கள் முன்னிலையில் மனைவியை இழிவுபடுத்தினாலோ, கேலி செய்தாலோ, அல்லது மற்றவர்கள் முன்னிலையில் அவளை அவமதித்தாலோ, அது மெல்ல மெல்ல அந்த உறவைச் சிதைத்துவிடும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை இழந்து அவள் மனதளவில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தொடங்குகிறாள்.
கணவன் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் போது
- ஒரு குடும்பத்தை நடத்துவது என்பது ஒருவருடைய பொறுப்பு மட்டுமல்ல அது கடமையும் கூடு. கணவன் தன் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும், குடும்பத்தின் தேவைகளைப் புறக்கணிக்கும் போது ஒரு ஆண், தன் மனைவியின் நம்பிக்கையை இழக்கிறான் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. ஒரு பெண் எல்லாவற்றையும் தனியாகக் கையாள வேண்டிய நிலை வரும்போது, அவள் உதவியற்றவளாக உணர்ந்து, படிப்படியாக அந்த உறவிலிருந்து விலகத் தொடங்குவாள்.

கணவன் நம்பிக்கையை மீறும் போது
- நம்பிக்கை தான் எந்தவொரு உறவின் அடித்தளமாகும். ஒரு கணவன் மீண்டும் மீண்டும் பொய் சொன்னாலோ, ஏமாற்றினாலோ, அல்லது வேறொருவர் மீது ஈர்க்கப்பட்டாலோ, ஒரு பெண் அவனை விட்டுப் பிரிந்து செல்ல முடிவெடுப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, நம்பிக்கை உடைந்தவுடன், ஓர் உறவைப் பேணுவது மிகவும் கடினமாகிவிடுகிறது என கூறப்படுகின்றது.
உறவைக் காப்பாற்றுவதற்கான வழி
ஒரு கணவன் மரியாதை, பொறுப்பு மற்றும் நேர்மையைக் கடைப்பிடித்தால், உறவுகள் நீண்ட காலத்திற்கு வலுவாக இருக்கும் என்று சாணக்கிய நீதி கூறுகின்றது.
சிறிய தவறுகளை உரிய நேரத்தில் சரிசெய்தால், ஒரு பெரிய நெருக்கடியைத் தவிர்க்கலாம்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் கணவன் தன் மனைவியிடமே் எந்த ஒரு விடயத்தையும் மறைக்க கூடாது என கூறப்படுகின்றது. தவறே செய்திருந்தாலும் ஒருபோதும் நம்மை நம்பிய மனைவியிடம் எதையும் மறைக்காமல் உண்மை பேசி கலந்துரையாடினால் உறவு தக்கும் எனப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).