இந்த நாளில் தவறியும் தங்கம் வாங்கீடாதீங்க... பாரிய நிதி இழப்பு ஏற்படும்!
இந்து சாஸ்திரத்தில் நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் முறையான விதிமுறைகளும் அதனை மீறும் பட்சத்தில் ஏற்படப்போகும் விளைவுகளும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இதனை முறையாக பின்பற்றியதன் காரணமாகத்தான் நமது முன்னோர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள். நமது முன்னோர்களால் பின்பற்றப்பட்ட பல விடயங்களை தற்காலத்தில் அறிவியலும் ஏற்றுக்கொண்டுள்ளது.
அந்தவகையில் ஜோதிட மற்றும் இந்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் தங்கம் வாங்கும் போது கட்டாயம் பின்வற்ற வேண்டிய சில விதிமுறைகள் காணப்படுகின்றது. அது குறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
சாஸ்திரங்களின் அடிப்படையில் அட்சய திருத்தியை போன்ற மங்களகரமான நாட்களில் தங்கம் வாங்கினால் தங்கம் பல மடங்காக அதிகரிக்கும் என்று நம்பப்படுகின்றது.மேலும் இது தங்கம் வாங்க மிகவும் உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது.
தங்கம் வாங்க சிறந்த நாள்
திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆகிய தினங்கள் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்கூயதாக இருக்கின்றது.
இந்த தினங்களில் தங்கம் வாழ்குவது வீட்டில் பொருளாதாரத்தை பெருகச்செய்கின்றது.மேலும் வியாழன் கிழமைகளில் பூச நட்சத்திரத்தில் தங்கம் வாங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. இதனால் லட்சுமி தேவியின் ஆசியை முழுமையாக பெற முடியும் என்பது ஐதீகம்.
தங்கம் வாங்கக்கூடாத நாள்
இந்து சாஸ்திரத்தின் படி தங்கம் ஒரு மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த உலோகமாக பார்க்கப்டுகின்றது. இது சூரிய பகவானின் சின்னமாகும்.
சூரியனுக்கும் சனிக்கும் இடையே பகை இருப்பதால் சனிக்கிழமைகளில் தங்கம் வாங்குவது அசுபமாக கருதப்படுகின்றது. மீறி வாங்கினால் சனி பகவானின் போக பார்வையில் சிக்கி பாரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |