விமானத்தில் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் எந்த நாட்டிற்கு சொந்தமாவார்கள்?
பலரும் நினைப்பார்கள் விமானத்தில் பயணிக்கும் போது குழந்தை பிறந்தால் ஆயுள் முழுவதும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று ஆனால் அது உண்மை இல்லை. இதன் உண்மை தன்மையை பதிவில் பார்க்கலாம்.
விமானத்தில் பிறந்த குழந்தைகள்
பொதுவாக விமானத்தில் குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதான ஒரு விடயம். அதிலும் அந்த குழந்தைகள் எந்த நாட்டிற்கு குடியுரிமை கொண்டவர்கள் என்பவை எல்லாம் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
சில நாடுகள் விமானம் தங்கள் வான் எல்லைக்குள் பறக்கும் போது குழந்தை பிற்ந்தால் அது அந்த நாட்டிற்கு சொந்தம் என குடியுரிமை கொடுப்பார்கள். இதற்கு சான்றாக அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளை எடுத்துக் கொள்ளலாம்.

அதாவது ஒரு சர்வதேச விமானம் அமெரிக்கா வான் பரப்பில் பற்ந்தால் அந்த விமானத்தில் குழந்தை பிறக்கிறது என்றால் பெற்றோர் எந்த நாடாக இருந்தாலும் குழந்தைக்கு அமெரிக்காவின் கடியுரிமை கொடுக்கப்படும்.
ஆனால் பெரும்பாலான நாடுகள் ரத்த உறவு சட்டத்தை பின்பற்றுகின்றன. ரத்த உறவு சட்டம் என்பது குழந்தை எங்கு பிறந்தாலும் அதன் குடியுரிமை தங்களின் பெற்றோர் எந்த நாட்டில் பிறந்தனரோ அந்த குடியுரிமை தான் வருமாம்.
உதாரணத்திற்கு இந்தியப் பெற்றோர்களுக்கு நடுவானில் குழந்தை பிறந்தால், அந்த குழந்தை இந்தியக் குடிமகனாகவே கருதப்படும். இது சில நேரங்களில் மாறுபடலாம். அதாவது விமானம் எந்த நாட்டில் பதிவு செய்யபட்டுள்ளதோ அந்த நாட்டின் குடியுரிமை தான் குழந்தைக்கு கிடைக்கும்.

1961-ல் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தத்தின்படி, கடலுக்கு மேலே சர்வதேச வான்பரப்பில் குழந்தை பிறந்தால், அந்த விமானம் எந்த நாட்டுக்குச் சொந்தமானதோ அந்த நாட்டின் மண்ணில் பிறந்ததாகக் கருதப்படும் எனப்படுகின்றது.
தற்போது கூட பலரும் நினைக்கும் ஒரு விடயம் நடவானில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை ஆயுள் முழவதும் அந்த விமானத்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது தான் ஆனால் இது ஒரு கட்டுக்கதை.
ஆனால், Thai Airways, AirAsia போன்ற சில நிறுவனங்கள் இது போல குழந்தைகள் நடுவானில் பிற்நதால் அந்த குழந்தைகள் சாகும் வரை இலவசமாக அந்த விமானத்தில் பயணம் செய்யலாம் என ஒரு கொடுத்து இருந்தது. இது எல்லா நாட்டிலும் கிடையாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |