எகிறும் தங்கத்தின் விலை குறித்து பிக் பாஸ் முத்துகுமரன் கருத்து - வைரல் காணொளி
தற்போது ஜெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை குறித்து பிக் பாஸ் முத்துக்குமரன் பேசி உள்ளார்.
தங்கம் விலை
ஆபரண தங்கத்தின் விலை தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்கம் வாங்குவதில் சிரமப்பட்டு வருகின்றனர்.
இன்றைய 22 காரட் தங்கத்தின்விலை விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,8000க்கும், சவரனுக்கு ரூ.9,520உயர்ந்து ரூ.1,34,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதனால் மக்கள் அவதிக்குள்ளாவதை பிக் பாஸ் முத்துகுமரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பேசி காணொளி பதிவிட்டுள்ளார். தங்கத்தின் விலை ஒரு நாளில் மூன்று தடவைகள் உயர்ந்து வருகின்றது.

முத்துக்குமரன்
முத்துக்குமரன் பேசிய வீடியோவில் முன்பெல்லாம் தங்கம் விலை எவ்வளவு என்று நான் பார்ப்பேன். வாங்கவில்லை என்றாலும் விலையை தெரிந்து கொள்வேன். ஆனால், இப்போது தங்கத்தின் விலையை பார்த்தால் எனக்கே அதிர்ச்சியாக உ்ளளது.
நாம் மூன்று வேளை சாப்பிலாம். ஆனால் மூன்று வேளை தங்கத்தின் விலை உயர்த்தினால் எப்படி.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 15,330, அதேபோல வெள்ளியின் விலையும் ஒரு கிராம் 400 ரூபாயாக இருக்கிறது. இப்படி விலை இருந்தால் பெண் குழந்தை வைத்திருக்கும் அனைவரும் என்ன செய்வார்கள்.
தன்னுடைய மகளுக்கு 20 பவுண் நகை போட்டு அனுப்பலாம் என நினைத்து கொண்டு இருப்பவாகள் என்ன செய்வார்கள்.

ஜி.எஸ்.டி, செய்கூலி, சேதாரம் என இன்றைய காலகட்டத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு குறைவாக ஒரு சவரன் தங்கத்தை வாங்க முடியாது. பெற்றோர் பிள்ளைக்கு 10 சவரன் நகை போட வேண்டும் என்றால் 15 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
30 சவரன் போட்டு மரியாதையாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் 30 லட்சம் ரூபாய். அவ்வளவு பணம் ஒரு சாதாரண நபரிடம் எப்படி இருக்கும்.
சிறுவயதில் எங்க தாத்தா, பாட்டி மூன்று ஆயிரத்துக்கு ஒரு சவரன் நகையை விற்று இருக்கிறார்கள். ஆனால் இன்று ஒரு சவரன் நகை 3 லட்சம் விற்கப்படகின்றது.
இந்த தங்கத்தின் விலையை கேட்டா வயிறு கப கபவென எரிகிறது. எதற்காக இவ்வளவு விலை கொடுத்து தங்கம், வெள்ளி வாங்க வேண்டும் என நினைத்தாலும், கூட அது நம் தேவையில் ஒன்றாக இருக்கிறது.

இந்த தங்கத்தின் விலை உயர்ந்தால் நமக்கு என்ன என யோசிக்காமல் விட்டால் அது பற்றிய செய்தி நம்மை யோசிக்க வைக்கிறது.
இப்படி முத்துக்குமரன் காணொளியில் பேசி முடித்து விட்டு இணையவாசிகளிடம் நீங்களும் தங்கத்தின் விலை பற்றி உன்ன அனுபவப்பட்டீர்கள் என்பதை கமன்ட் செய்யுங்கள் என கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |